ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 75 ஆம் மாத நிகழ்வாக ஊற்றங்கரை பேலியோ கட்செவி குழுவுடன் இணைந்து பேலியோ (ஆதிமனிதன் உணவுமுறை )விழிப்புணர்வு கருத்தரங்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 1௦ மணியளவில் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது
வாசகர் வட்ட துணை செயலர் சித .வீரமணி விழாவினை ஒருங்கிணைத்தார் |
அறிவாசான் தந்தைபெரியார் அவர்கள் 03/02/1964 அன்றைய விடுதலையில் நாம் சக்திகுறைந்தவர்களாகவும் ,மனஉறுதியற்றவர்களாகவும்,சோம்பேறிகளாகவும் இருக்கக் காரணம் நமது அரிசி உணவு தான் ,அரிசி மனிதனை சாகாமல் வைத்திருக்குமே ஒழிய வலிவு உடையவனாக இருக்க உதவாது ,அதில் சத்து இருக்காது .மற்ற காய்கறிகளிலும் அவ்வளவாகச் சத்து அதிகம் இராது ,அரிசியும் காய்கறியும் சோம்பேறியாக ஊரார் உழைப்பை உண்டு வாழக் கூடியவர்களுக்கு வேண்டுமானால் பொருந்துமே ஒழிய உழைப்பாளிகளுக்கு ஏற்றதல்ல என்று கூறிய படி அண்மைக்காலாமாக தமிழ்நாட்டில் வளர்த்து வரும் உணவுமுறை தான் பேலியோ (ஆதிமனிதன் உணவுமுறை ).விடுதலை வாசகர் வட்டத்தின் மருத்துவ அறிவியல் சார்ந்த மாத நிகழ்வாக பேலியோ (ஆதிமனிதன் உணவுமுறை )விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது
நிகழ்வின் தொடக்கமாக காலை 9 மணியளவில் தமிழர்களுக்கு பேலியோ உணவு முறையை அறிமுகப்படுத்திய ஆரோக்கியம் நலவாழ்வு முகநூல் குழுவின் தலைவரும் அமெரிக்க வாழ் தமிழருமான நியாண்டர் செல்வன் அவர்கள்திருப்பூர் பேலியோ கூட்டத்தில் ஆற்றிய உரையின் காணொளி ஒளிபரப்பப்பட்டது .இந் நிகழ்விற்கு ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் அண்ணா.அப்பாசாமி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்
பழ.பிரபு விழா அறிமுக உரை |
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட செயலர் பழ.பிரபு விழா குறித்தும் தமது பேலியோ அனுபவங்கள் குறித்தும் விழா அறிமுக உரையாற்றினார்
பேலியோ(ஆதிமனிதன் உணவுமுறை ) குறித்த தமது அனுபவங்களையும் ,இம் உணவுமுறை தந்தை பெரியார் அவர்கள் கூறிய வாழ்வியலோடு எவ்வாறு பொருந்துகிறது என்பதையும் மேட்டூர் தோழர் முல்லைவேந்தன் விளக்கி தமது அனுபவ உரையை சுவைபட பகிர்ந்து கொண்டார்
.வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு நூல்களை அளித்து சிறப்பு செய்யப்பட்டது
ஆரோக்கியம் நலவாழ்வு முகநூல் குழுமத்தின் தன்னார்வலர்களில் ஒருவரும் சீரிய பெரியாரிய செயல்பாட்டாளருமான வி.சி .வில்வம் அவர்கள் பேலியோ உணவு முறை குறித்தும் ,உடலில் ஏற்படும் பல்வேறு நோய்கள் இவ் உணவு முறையால் தீர்க்கப்படுகிறது என்பதையும் பவர் பாயின்ட் மூலம் வெகு சிறப்பாக விளக்கி தமது கருத்துரை ஆற்றினார்
நிறைவாக பெரியார் மருத்துவ குழுவின் மாநில செயலரும் ,விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரியின் இணை பேராசிரியருமான மருத்துவர் .பழ.ஜெகன்பாபு அவர்கள் பொதுமக்களின் பேலியோ தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு மருத்துவ அறிவியல் ரீதியாக விளக்கமளித்தார் .விடுதலை வாசகர் வட்டத்தின் செயற்குழு உறுப்பினர் செ.சிவராஜ் அவர்களின் நன்றியுரையுடன் விழா நிறைவுபெற்றது .விழாவினை மிகச் சிறப்பாக விடுதலை வாசகர் வட்ட துணை செயலாளரும் தலைமை ஆசிரியருமான சித .வீரமணி அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தார் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கொய்யா காய் ,பேலியோ பரிந்துரைக்கும் உணவுகளில் ஒன்றான முட்டையும் மதிய உணவாக வழங்கப்பட்டது .இது போன்ற மருத்துவம் சார்ந்த
நிகழ்வுகளை விடுதலை வாசகர் வட்டம் தொடர்ந்து நடத்திட வேண்டுமென கலந்து கொண்ட பலரும் வேண்டுகோள் விடுத்தனர்
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்திற்கும், நிகழ்வை ஒருங்கிணைத்த திரு பழ. பிரபு, நண்பர்கள் முல்லைவேந்தன் பெரியார், வி.சி.வில்வம் உரையாற்றிய மருத்துவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியும், வாழ்த்தும்
ReplyDelete