விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Monday, 26 December 2022

வணிகர் நலன் மேம்பாட்டிற்கான சரக்கு மற்றும் சேவை வரி (GST) குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்





















ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் 24/12/2022 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் வெகு சிறப்புடன் நடைபெற்றது

சோதனை கொள்முதல் (Test Purchase) சரக்கு மற்றும் சேவை வரி (GST) மற்றும் வணிகவரித்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ,தொழில் வளர்ச்சி வணிகர் நலன் மற்றும் வழிகாட்டல் குறித்த வல்லுனர்கள்


தணிக்கையாளர்கள் மற்றும் வணிகர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு கருத்தரங்கத்தை ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் நடத்தப்பட்டது

நிகழ்வின் தொடக்கமாக திராவிட இயக்க தலைவர்களான தந்தை பெரியார் வள்ளல் எம்.ஜி.ஆர் படங்களை அவர்களின் நினைவு நாளையொட்டி விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் தணிகை.ஜி.கருணாநிதி அவர்களும் திராவிடர் கழக தலைமை கழக சொற்பொழிவாளர் பழ.வெங்கடாசலம் அவர்களும் திறந்து வைத்து மரியாதை செய்தனர். நிகழ்வை ஆடிட்டர். CA ஜெய்சுதா லோகாதன் அவர்கள் வரவேற்புரையாற்றி தொடங்கி வைத்தார


விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளாளர் ஆடிட்டர் ந.இராசேந்திரன் அவர்கள் விழா அறிமுக உரையாற்ற விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் தணிகை.ஜி.கருணாநிதி அவர்கள் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார்


ஆடிட்டர் .ஜி . சத்யமூர்த்தி அவர்களும் ஆடிட்டர் .CA.வடிவேல் அவர்களும் விழாவினை தொடங்கி வைத்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) மற்றும் வணிகவரித்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விரிவாக விளக்கினார் . பவர் பாயிண்ட் மூலம் சரக்கு மற்றும் சேவை வரி (GST) மற்றும் வணிக வழிகாட்டலை வணிகர்கள் மிக எளிமையாக புரிந்து கொள்ளும் வண்ணம் ஆடிட்டர் CMAலோகநாதன் சேகர் எடுத்துரைத்தார்


கிருட்டிணகிரி பகுதியை சார்ந்த ஆடிட்டர் . B.H.லியாகத் அலி ஆடிட்டர் . P.ஹரிஹரன் ஆடிட்டர் . M.ஷபீர் உசேன் ஒசூர் பகுதியை சார்ந்த ஆடிட்டர் . S.திலகவதி ஆடிட்டர் . C.தீபா தருமபுரி பகுதியை சார்ந்த ஆடிட்டர் . V.அருள் தருமபுரி பகுதியை சார்ந்த ஆடிட்டர் . S.ராமச்சந்திரன் ஆடிட்டர் . வேலாயுதம் ஆடிட்டர் ஜெயசீலன் ஆகியோர் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று கருத்துரை வழ்ங்கி வணிகர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர்


விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு அவர்கள் விழாவினை ஒருங்கிணைக்க திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் செ.சிவராஜ் அவர்கள் நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவு பெற்றது . வருகை தந்த அனைவருக்கும் இரவு விருந்து அளிக்கப்பட்டது. இது போன்ற விழிப்புணர்வு நிகழ்வை தொடர்ந்து நடத்திட வேண்டுகோள் விடுத்தனர்

வணிகர் நலன் மேம்பாட்டிற்கான சரக்கு மற்றும் சேவை வரி (GST) குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

 


கொள்கை பாசறையாக நடைபெற்ற ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட கூட்டம் !

கடந்த 25 .09.2022 ஞாயிற்றுக்கிழமை ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் செப்டெம்பர் மாத கூட்டம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, மற்றும் புலவர் மா. நன்னன் நூற்றாண்டு தொடக்க விழாவாக மிக சிறப்புடனும் எழுச்சியுடனும் நடைபெற்றது


விழாவில் தொடக்கமாக பங்கேற்ற அனைவரையும் ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி தலைவர் மானமிகு கோ. சரவணன் அவர்கள் வரவேற்று உரையாற்றினார்


எம்.ஜி ஆர் நூற்றாண்டு அறக்கட்டளையின் உறுப்பினர் இல.ராஜ்கணேஷ் .அரசு பள்ளிகள் வளர்ச்சி அறக்கட்டளையின் செயலர் தே.சதீஷ்பாபு , திமுக கிளை செயலர் இர.பா.பார்த்தீபன் என்கிற தீபக் ,ஊற்றங்கரை நகர திமுக அவைத்தலைவர் தணிகை குமரன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர் .


ஊற்றங்கரை பகுதியில் விடுதலை சந்தா சேர்ப்பில் அயராது பாடுபட்டு ஊற்றங்கரை ஒன்றியம் சார்பில் முதல் தவணையாக 200 சந்தாக்களை திரட்டி வழங்கிய ஒன்றிய திராவிடர் கழக தலைவர் மானமிகு செ. பொன்முடி, ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் மானமிகு செ.சிவராஜ், மானமிகு சீனி முத்து. ராஜேசன் , ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி தலைவர் சரவணன் ஆகியோருக்கு மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் அவர்கள் சிறப்பு செய்தார். திராவிடர் கழகத்தில் புதியதாக இணைத்து கொண்ட தோழர்களுக்கு வரவேற்று பயனாடை அணிவிக்கப்பட்டது . சிங்காரப்பேட்டை கால்நடை மருத்துவமனைக்கு விடுதலை வாசகர் வட்டம் சார்பில் தந்தை பெரியார் படம் வழங்கப்பட்டது. கால்நடை மருத்துவர் பா.பாசில் அவர்கள் பெற்றுக்கொண்டார். நிகழ்விற்கு தலைமை தாங்கிய ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் தணிகை ஜி கருணாநிதி அவர்கள் தலைமை உரையாற்றினார்


தமிழ் அறிஞரும் பெரியார் பெரியார் பேருரையாளருமான புலவர் மா.நன்னன் அவர்களின் படத்தை திமுக மாவட்ட துணை செயலாளர் திருமிகு எம்.சந்திரன் அவர்கள் திறந்து வைத்து புலவர் மா.நன்னன் அவர்களை பற்றிய அரிய செய்திகளை எடுத்துரைத்தார்.


அதை தொடர்ந்து உயிராயுதம் தந்த பேராயுதம் எனும் தலைப்பில் திராவிடர் கழக மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.


இந் நிகழ்ச்சியினை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் மானமிகு.பழ.பிரபு அவர்கள் ஒருங்கிணைக்க ஒன்றிய திராவிடர் கழக இளைஞர் அணி செயலாளர் மானமிகு தா.சிவகுமார் அவர்கள் நன்றியுரை கூறினார்


இந் நிகழ்வில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி , திமுக மாவட்ட துணை செயலாளர் திருமிகு எம்.சந்திரன் ஆகியோர் அரையாண்டு விடுதலை சந்தா வழங்கினார். ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க பொறுப்பாளர் இராமசாமி அவர்கள் மாடர்ன் ரேஷனலிஸ்ட் இதழுக்கு சந்தா அவர்கள் அரையாண்டு வழங்கினார்







வருகை தந்த அனைவருக்கும் அறிவாசான் தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி சிறப்பான மதிய விருந்து வழங்கப்பட்டது . கொள்கை பாசறை வகுப்பு போல நடைபெற்ற கூட்டம் தொடர்ந்து வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்திட வேண்டும் என பலரும் வேண்டுகோள் விடுத்தனர்

தந்தை பெரியார் பிறந்த நாள் பேராசிரியர் மா .நன்னன் படத்திறப்பு





 

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் சங்கநாதம் !

 




டாக்டர் கலைஞர் அவர்களின் 99 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் இனமான பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழாவை ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் ஜூலை 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  மாலை 3 மணியளவில் ஊற்றங்கரை வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் வெகு சிறப்புடன் கொண்டாடப்பட்டது 

தொடக்கமாக விடுதலை வாசகர் வட்டத்தின் புரவலர் மருத்துவர் கை.கந்தசாமி அவர்கள் வரவேற்புரையாற்றி தொடங்கி வைக்க திமுக மாவட்ட பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் அவர்கள் டாக்டர் கலைஞர் அவர்களின் திரு உருவ படத்தினை முத்தமிழறிஞர் கலைஞர் வாழ்க !  என்கிற ஒலிமுழங்கங்கள் ஒலிக்க பலத்த கரவொலிகளுக்கிடையே திறந்து வைத்தார் 

நிகழ்வின் தொடர்ச்சியாக பாராட்டு விழா நடைபெற்றது. ஊற்றங்கரை நகரின் திராவிட இயக்க முன்னோடி பேரூர் கழக தலைவர் இர.பாபு சிவக்குமார் அவர்களுக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் அவர்கள் சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு பாராட்டுரை வழங்கினார். ஏராளமான திராவிட முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள் இர.பாபு சிவக்குமார் அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர் 

வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு திராவிடர் கழகம் மற்றும் திராவிட முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள் இணைந்து  சமூகநீதியின் சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உருவப்படத்தினை வழங்கி சிறப்பு செய்தார்கள்.கருதுரையாற்ற வருகை தந்த திமுக மாவட்ட பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் அவர்களுக்கு லேசர் மூலம்  டாக்டர் கலைஞர் உருவம் பொறித்த இரும்பு  தகட்டினை விடுதலை வாசகர் வட்ட  தலைவர் தணிகை ஜி கருணாநிதி அவர்கள் நினைவு பரிசாக வழங்கினார் விடுதலை வாசகர்  வட்டத்தின் சிறப்பான பணிகளை பாராட்டி மருத்துவர் கை கந்தசாமி அவர்கள் ரூபாய் 10 ஆயிரத்திற்கான காசோலையை மாவட்ட பொறுப்பாளர்  மூலமாக விடுதலை வாசகர் வட்டத்திற்கு வழங்கினார்

நிகழ்வை தொடர்ந்து  பாராட்டு பெற்ற பேரூர் கழக செயலர் பாபு சிவக்குமார் அவர்கள் ஏற்புரை  நிகழ்த்தினார் அதைத் தொடர்ந்து “திராவிட மாடல்”  என்கிற தலைப்பில் திமுக கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் டி. செங்குட்டுவன் அவர்கள் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் திராவிடன் மாடல் குறித்து ஆதாரப்பூர்வமான உரையை நிகழ்த்தினார் . உரையின் தொடக்கத்தில் கலைஞர் குறித்த ஒரு கவிதையை வாசித்தது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை தந்தது.  திராவிட மாடல் என்பது தமிழகத்தின் வளர்ச்சியை உள்ளடக்கியது ,திராவிட மாடலால்  எவ்வாறு பிற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக விளங்கி வருகின்றது  என்பதை பல்வேறு ஆதாரங்களுடன்  சுட்டிக்காட்டி திராவிடர்  கழகம் திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய உறவுகளை அவர் தனது உரையில்  தொட்டுக்காட்டி கொள்கை அடிப்படையில்  பயணிப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தக் கூடிய வகையில் அவருடைய உரை அமைந்தது. சமூக நீதி கொள்கை வழி பயணிப்பது  தான்  திராவிட மாடல்  என்று  தனது கருத்துக்களை வெளிப்படுத்தி உரையாற்றினார் 

இந்த நிகழ்வை திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிமுத்து ராஜேஷ் ஒருங்கிணைக்க திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் செ.சிவராஜ் அவர்கள் நின்று உரையாற்ற விழா நிறைவு பெற்றது

ஏராளமான திராவிடர் கழக திராவிட முன்னேற்ற கழக மாவட்ட ஒன்றிய நகர கழக பொறுப்பாளர்கள் பங்கேற்று ஒரு சிறப்பான கூட்டமாக அமைந்தது

ஒளிப்படங்களை காண :

https://photos.google.com/share/AF1QipPwDLS64RN4jRCRQry7OT0TojNsN7MPSfR6tJe6fq3jU43tQlw4IgPIx9YyyqSGDw?key=RmhXMmdLRG1QSV90emZNbU0xbUJHU3dYd3ZYTXZB

டாக்டர் கலைஞர் அவர்களின் 99 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் இனமான பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா