டாக்டர் கலைஞர் அவர்களின் 99 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் இனமான பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழாவை ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் ஜூலை 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் ஊற்றங்கரை வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் வெகு சிறப்புடன் கொண்டாடப்பட்டது
தொடக்கமாக விடுதலை வாசகர் வட்டத்தின் புரவலர் மருத்துவர் கை.கந்தசாமி அவர்கள் வரவேற்புரையாற்றி தொடங்கி வைக்க திமுக மாவட்ட பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் அவர்கள் டாக்டர் கலைஞர் அவர்களின் திரு உருவ படத்தினை முத்தமிழறிஞர் கலைஞர் வாழ்க ! என்கிற ஒலிமுழங்கங்கள் ஒலிக்க பலத்த கரவொலிகளுக்கிடையே திறந்து வைத்தார்
நிகழ்வின் தொடர்ச்சியாக பாராட்டு விழா நடைபெற்றது. ஊற்றங்கரை நகரின் திராவிட இயக்க முன்னோடி பேரூர் கழக தலைவர் இர.பாபு சிவக்குமார் அவர்களுக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் அவர்கள் சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு பாராட்டுரை வழங்கினார். ஏராளமான திராவிட முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள் இர.பாபு சிவக்குமார் அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்
வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு திராவிடர் கழகம் மற்றும் திராவிட முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள் இணைந்து சமூகநீதியின் சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உருவப்படத்தினை வழங்கி சிறப்பு செய்தார்கள்.கருதுரையாற்ற வருகை தந்த திமுக மாவட்ட பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் அவர்களுக்கு லேசர் மூலம் டாக்டர் கலைஞர் உருவம் பொறித்த இரும்பு தகட்டினை விடுதலை வாசகர் வட்ட தலைவர் தணிகை ஜி கருணாநிதி அவர்கள் நினைவு பரிசாக வழங்கினார் விடுதலை வாசகர் வட்டத்தின் சிறப்பான பணிகளை பாராட்டி மருத்துவர் கை கந்தசாமி அவர்கள் ரூபாய் 10 ஆயிரத்திற்கான காசோலையை மாவட்ட பொறுப்பாளர் மூலமாக விடுதலை வாசகர் வட்டத்திற்கு வழங்கினார்
நிகழ்வை தொடர்ந்து பாராட்டு பெற்ற பேரூர் கழக செயலர் பாபு சிவக்குமார் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார் அதைத் தொடர்ந்து “திராவிட மாடல்” என்கிற தலைப்பில் திமுக கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் டி. செங்குட்டுவன் அவர்கள் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் திராவிடன் மாடல் குறித்து ஆதாரப்பூர்வமான உரையை நிகழ்த்தினார் . உரையின் தொடக்கத்தில் கலைஞர் குறித்த ஒரு கவிதையை வாசித்தது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை தந்தது. திராவிட மாடல் என்பது தமிழகத்தின் வளர்ச்சியை உள்ளடக்கியது ,திராவிட மாடலால் எவ்வாறு பிற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக விளங்கி வருகின்றது என்பதை பல்வேறு ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி திராவிடர் கழகம் திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய உறவுகளை அவர் தனது உரையில் தொட்டுக்காட்டி கொள்கை அடிப்படையில் பயணிப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தக் கூடிய வகையில் அவருடைய உரை அமைந்தது. சமூக நீதி கொள்கை வழி பயணிப்பது தான் திராவிட மாடல் என்று தனது கருத்துக்களை வெளிப்படுத்தி உரையாற்றினார்
இந்த நிகழ்வை திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிமுத்து ராஜேஷ் ஒருங்கிணைக்க திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் செ.சிவராஜ் அவர்கள் நின்று உரையாற்ற விழா நிறைவு பெற்றது
ஏராளமான திராவிடர் கழக திராவிட முன்னேற்ற கழக மாவட்ட ஒன்றிய நகர கழக பொறுப்பாளர்கள் பங்கேற்று ஒரு சிறப்பான கூட்டமாக அமைந்தது
ஒளிப்படங்களை காண :
https://photos.google.com/share/AF1QipPwDLS64RN4jRCRQry7OT0TojNsN7MPSfR6tJe6fq3jU43tQlw4IgPIx9YyyqSGDw?key=RmhXMmdLRG1QSV90emZNbU0xbUJHU3dYd3ZYTXZB
No comments:
Post a Comment