சவால்களை எதிர் கொள்ளுங்கள் மகளிரே ! - ஆடிட்டர் ஜெய் சுதா அவர்களின் மகளிர் தின உரை
50 ஆண்டுகளுக்கும் மேலாக ஊற்றங்கரையில் கல்வி பணியாற்றி வரும் சிவா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ஜோதி செல்வராசன் அவர்கள் விடுதலை வாசகர் வட்டத்தால் பாராட்டுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்டார் .பங்கேற்றிருந்த அனைத்து மகளிர்க்கும் மகளிர் தின வாழ்த்துகளை கூறி விடுதலை வாசகர் வட்டத்தின் செயலாளர் பழ.பிரபு பாராட்டுரை நிகழ்த்தினார் .அனைவரின் பாராட்டுக்களையும் ஏற்ற பின்னர் கல்வியாளர் ஜோதி செல்வராசன் ஏற்புரை நிகழ்த்தினார்
அனைத்து மகளிர் நிலைய காவல் ஆய்வாளர் பி. இலட்சுமி அவர்களும் முன்னிலை வகித்து மகளிர் பெற வேண்டிய உரிமைகள் குறித்தும் அதிகார வாய்ப்பை பயன்படுத்திக் மகளிர் அற்ற வேண்டிய பணிகள் குறித்தும் சிறப்பாக உரையாற்றினார்கள்
“ பாலியல் நீதிக்கான வேர்களைத் தேடி ... “ என்னும் தலைப்பில் திராவிடர் கழக மண்டல மகளிரணி செயலர் ந.தேன்மொழி அவர்கள் மிகச் சிறப்பான கருத்துரையை நிகழ்த்தினார் . மகளிர் உரிமைக்காக திராவிட இயக்கம் ஆற்றிய பணிகளை சுட்டிக்காட்டி பாலின சமத்துவத்திற்கு எது தடையாக இருக்கிறது என்பதையெல்லாம் சுட்டிக்காட்டி உரையாற்றினார்
No comments:
Post a Comment