விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Friday, 7 April 2023

மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்ற ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் உலக மகளிர் தின விழா !

                   

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் கடந்த மார்ச் 26  ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  காலை 10 மணியளவில் ஊற்றங்கரை வித்யா மந்திர் விருந்தினர்  மாளிகையில்  உலக மகளிர் தின விழா கருத்தரங்கம் படத்திறப்பு பாராட்டு என மூன்று நிகழ்வுகளை உள்ளடக்கி வெகு சிறப்புடன் கொண்டாடப்பட்டது

 

நிகழ்வின் தொடக்கமாக  ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் மகளிர் பாசறையின் தலைவர் அ.முருகம்மாள் அவர்கள் வரவேற்புரை ஆற்ற விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளர் ஆடிட்டர்.ந.இராசேந்திரன் மாத அறிக்கை வாசித்தார் . இக் கூட்டத்திற்கு ஊற்றங்கரை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் உஷாராணி குமரேசன் தலைமை தாங்கினார்

 

ஊற்றங்கரை பேரூராட்சியின் பெண் உறுப்பினர்களான சுமித்ரா தவமணி கா.கனகேஸ்வரி S.. அபிபுனிஷா ம.சாகிதா பேகம்  M..மணிமேகலை  .கவிதா குப்புசாமி   ஆகியோர் உரையாற்றி மகளிர் தின வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்தனர் . நிகழ்வில்  தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் அவர்களின் படத்தினை  10வது   வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர்  நிர்மலா கந்தசாமி அவர்கள் திறந்து வைத்தார் . திராவிட இயக்க வீராங்கனை சத்தியவாணி முத்து படத்தினை ஊற்றங்கரை பேரூராட்சியின் துணைத்தலைவர் கலைமகள் தீபக் திறந்து வைத்து உரையாற்றினார் . இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சராக விளங்கிய ஜானகி  ராமச்சந்திரன் அவர்களின் படத்தினை சென்னம்மாள் ஆறுமுகம் திறந்து வைத்து உரையாற்றினார்

 

50 ஆண்டுகளுக்கும் மேலாக ஊற்றங்கரையில் கல்வி பணியாற்றி வரும் சிவா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ஜோதி செல்வராசன் அவர்கள் விடுதலை வாசகர் வட்டத்தால் பாராட்டுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்டார் .பங்கேற்றிருந்த அனைத்து மகளிர்க்கும் மகளிர் தின வாழ்த்துகளை கூறி விடுதலை வாசகர் வட்டத்தின் செயலாளர் பழ.பிரபு  பாராட்டுரை நிகழ்த்தினார் .அனைவரின் பாராட்டுக்களையும் ஏற்ற பின்னர்   கல்வியாளர் ஜோதி செல்வராசன் ஏற்புரை நிகழ்த்தினார்

 

நிகழ்வில் ஆடிட்டர் ஜெய் சுதா அவர்களும் அனைத்து மகளிர் நிலைய காவல் ஆய்வாளர் பி. இலட்சுமி அவர்களும் முன்னிலை வகித்து மகளிர் பெற வேண்டிய உரிமைகள் குறித்தும் அதிகார வாய்ப்பை பயன்படுத்திக் மகளிர் அற்ற வேண்டிய பணிகள் குறித்தும் சிறப்பாக  உரையாற்றினார்கள்

 

நிறைவாக  “ பாலியல் நீதிக்கான வேர்களைத் தேடி ... “ என்னும் தலைப்பில் திராவிடர் கழக மண்டல மகளிரணி செயலர் ந.தேன்மொழி அவர்கள் மிகச் சிறப்பான கருத்துரையை நிகழ்த்தினார் . மகளிர் உரிமைக்காக திராவிட இயக்கம் ஆற்றிய பணிகளை சுட்டிக்காட்டி பாலின சமத்துவத்திற்கு எது தடையாக இருக்கிறது என்பதையெல்லாம் சுட்டிக்காட்டி உரையாற்றினார் .அவரது உரை பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது . வருகை தந்த அனைவருக்கும் சிவா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் மாலதி அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது .  வருகை தந்த அனைவருக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டது.

 

ஒளிப்படங்களை காண ...

 

https://photos.app.goo.gl/PUPnGSGoZ5eoyNKm8
















































































 

No comments:

Post a Comment