விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Thursday, 22 May 2025

கோடை விடுமுறையை ஒட்டி, ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் "பயணம் குறித்த சிறப்பு கருத்தரங்கம்"

கோடை விடுமுறையை ஒட்டி, ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் "பயணம் குறித்த சிறப்பு கருத்தரங்கம்" 18.05.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.










கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் செ.பொன்முடி அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றி நிகழ்வினை தொடங்கி வைத்தார். விடுதலை வாசகர் வட்டத்தின் செயலாளர் பழ.பிரபு கூட்டத்தின் நோக்கத்தை கூறி உரையாற்றினார் இக் கருத்தரங்கத்திற்கு வழக்கறிஞர் ந. ஜெயசீலன் தலைமை தாங்கி தமது தமது இளைமைக் கால கோடை விடுமுறை அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன் தமது ஆஸ்திரேலிய பயண அனுபவங்களையும் விவரித்தார்

பயணம் குறித்த சிறப்பு கருத்தரங்கிற்கு சமூக செயற்பாட்டாளர் சா. யாசர் அராபத் மாருதி பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் மு.மாதையன் தொழிலதிபர் சி.ஆறுமுகம் உள்ளிட்ட தோழர்கள் முன்னிலை வகித்து உரையாற்றினர் 70 வது வயதில் இமயமலையின் ஒரு சிகரத்தை தொட்டு திரும்பிய வழக்கறிஞர் பொ. வே. ஆனந்தகிருஷ்ணன் அவர்கள் தமது பயண அனுபவங்களை சுவைப்பட பகிர்ந்து கொண்டார் அதைத்தொடந்து “பயணங்கள் முடிவதில்லை” என்ற தலைப்பில் பல்வேறு பயணங்கள் குறித்து வரலாற்று தகவல்களையும் இணைத்து கவிஞர்.இ.சாகுல் அமீது சிறப்புரையாற்றினார்


வருகை தந்த விருந்தினர்களுக்கு மேனாள் திராவிடர் கழக மண்டல செயலாளர் பழ.வெங்கடாசலம் , தணிக்கையாளர்கள் லோகநாதன் சேகர் ,ஜெயசுதா ,கவிஞர் எழு. ஞாயிறு , கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் செ.பொன்முடி ஆகியோர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர் இந்த நிகழ்விற்கு வந்திருந்த அனைவருக்கும் திராவிடர் கழக ஒன்றியத் தலைவர் அண்ணா. அப்பாசாமி நன்றியுரை தெரிவிக்க நிகழ்ச்சியை திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் செ.சிவராஜ் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிமுத்து.இராஜேசன் நிகழ்வினை சமூக ஊடகங்களில் வெளியிட ஒளிப்பதிவு செய்தார் பங்கேற்றோர் விடுதலை வாசகர் வட்டத்தின் இத்தகைய பயன்மிகு நிகழ்வுகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். கருத்தரங்கத்தின் முடிவில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற பயணம் குறித்த கருத்தரங்கில்

 

 

பயணம் வெல்லட்டும் என்கிற தலைப்பில்  கவிஞர் இ.சாகுல் அமீது ஆற்றிய உரை

https://youtu.be/wI6kghyTJ3M?si=FiniIEGQZIfFqLvd

 

இமயமலையின்  ஒரு சிகரம் தொட்ட  வழக்கறிஞர் பொ.வே.ஆனந்த கிருஷ்ணன் உரை

https://youtu.be/9eRAmMAuWBs?si=jimVY_uSJT_dxMMU

 

பயணம் குறித்த  கருத்தரங்கில் ஆஸ்திரேலிய பயணம் குறித்த வழக்கறிஞர் ந.ஜெயசீலன் உரை

https://youtu.be/8MbymJqpAxc?si=WZtbUdrQkC121W1L

 

பயணம்  குறித்த  கருத்தரங்கின்  நோக்கம் குறித்து விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு  உரை

https://youtu.be/NE7ptzDumYk?si=D56aJ4oIzvQH8c2O

பயணம்  குறித்த  கருத்தரங்கில்  முன்னிலை வகித்து சமூக செயற்பாட்டாளர்  சா.யாசர் அராஃபத் உரை

https://youtu.be/Acy9lhUUfiU?si=x3f10UdgguHH8iL9

 

பயணம்  குறித்த  கருத்தரங்கில்  முன்னிலை வகித்து  திருமிகு  சி.ஆறுமுகம்  உரை

https://youtu.be/U_YZHhZxP2Q?si=oEtpzYdwHmL4Tg8Q

Tuesday, 22 April 2025

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் வெகு சிறப்புடன் நடைபெற்ற தவத்திரு.குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா !


ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில்  தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா மற்றும்  ஊற்றங்கரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் 35ஆண்டு கால பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் .தேவராசன் அவர்களுக்கு பாராட்டு விழா கடந்த ஏப்ரல் 20 (20/04/2025 ) ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  மாலை 4  மணியளவில் ஊற்றங்கரை வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் வெகு சிறப்புடன் நடைப்பெற்றது

 

https://photos.app.goo.gl/KBaLNkoX9bbnA8iM9


திராவிடர் கழக செயலாளர்  செ.சிவராசன் வரவேற்புரை நிகழ்த்தினார். ஊற்றங்கரை பேரூராட்சி தலைவர் பா.அமானுல்லா  தலைமை தாங்கினார். தவத்திரு.குன்றக்குடி அடிகளார்  அவர்களின் படத்தினை திறந்து வைத்து அடிகளாரின் சமூக புரட்சியை நினைவு கூர்ந்து அரிமா.மு.இராசா உரையாற்றினார்

 

திராவிடர் கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் .கி.வீரமணி அவர்களால்  தொகுக்கப்பட்டதவத்திரு குன்றக்குடி அடிகளார் அறிவுப் பெட்டகம்என்கிற நூலினை ஊற்றங்கரை பேரூராட்சித் தலைவர் பா.அமானுல்லா  வெளியிட முதல் பிரதியின அரசுப் பள்ளிகள் வளர்ச்சி அறக்கட்டளையின்  தலைவர் தணிக்கையாளர் லோகநாதன் சேகர் பெற்றுக் கொண்டார்.அவரை தொடந்து ஊற்றங்கரையின்   முக்கிய பிரமுகர்கள்  ஏராளமானோர் வரிசையில் நின்று நூலினை பெற்றுக்  கொண்டனர்


ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் ஒவ்வொரு மாதமும் ஊற்றங்கரை நகரின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றியவர்களைப் பாராட்டி வருகிறது. இந்த வரிசையில், ஊற்றங்கரை அரசு பெண்கள்  மேல்நிலைப் பள்ளியின்  35 வருட பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் .தேவராசன் அவர்கள் பாராட்டப்பட்டார். திரு தேவராசன் அவர்களுக்கும், அவரது துணைவியார் கௌசல்யா   அவர்களுக்கும் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் விடுதலை வாசகர் வட்ட அறக்கட்டளையின் உறுப்பினரும், கல்வியாளருமான வித்யா மந்திர் கல்வி நிறுவனத்தின் தலைவர் வே. சந்திரசேகரன்  அவர்கள்  பலத்த கரவொலிகளுக்கு  இடையே  பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார் .அதை தொடர்ந்து ஊற்றங்கரை நகரின் பல்வேறு கட்சியைச் சார்ந்த பிரமுகர்களும் கல்வியாளர்களும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர்

 

விடுதலை வாசகர் வட்டத்தின் பணிகளைப் பாராட்டி .தேவராசன் அவர்களின் குடும்பத்தினர்  திருமதி கௌசல்யா  திரு தினேஷ்  திரு சதீஷ் திருமதி மகிஷா  ஆகியோர்  விடுதலை வாசகர் வட்டத்திற்கு PODIUM நன்கொடையாக வழங்கினார்கள் விடுதலை வாசகர் வட்டத்தின்  சார்பில்  பொருளர் ஆடிட்டர் .இராசேந்திரன்   வாசகர் வட்ட செயலர் பழ.பிரபு கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் செ. .பொன்முடி மாவட்ட இளைஞரணித் தலைவர் சீனிமுத்து .இராஜேசன் ஊற்றங்கரை ஒன்றியத்தலைவர் அண்ணா .அப்பாசாமி ஒன்றிய செயலர் சிவராசன் ஆகியோர் பெற்றுக்கொண்டார்

 

இந்த நிகழ்விற்கு ...தி.மு.. நகர செயலார் சிக்னல்.ஆறுமுகம் காமராஜர் அறக்கட்டளையின் தலைவர் டி.எஸ்.திருநாதன் ,கிருட்டிணகிரி மாவட்ட ...தி.மு.. துணை செயலாளர் பா.சாகுல் அமீது ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர் .மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் கே...கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பாராட்டுரை நிகழ்த்தினார் . அதைத் தொடர்ந்துமனிதம் வெல்லட்டும்என்ற தலைப்பில் மிகச் சிறப்பான உரையை அரிமா  நூருல்லா ஷெரிப் அவர்கள் வழங்கினார்கள் நிறைவாக இரவீந்திரன்  நன்றியுரையாற்றினார்

 

 

நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும்  உணவு வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவரும் விடுதலை வாசகர் வட்டத்தின் தொடர் பணிகளை பாராட்டியதுடன்   இதுபோன்ற கருத்தரங்குகளை தொடர்ந்து  நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

 

 

விழா நிகழ்வின் புகைப்படங்களை காண :

https://photos.app.goo.gl/KBaLNkoX9bbnA8iM9 

 

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் "முத்தமிழைக் காப்போம் முனைந்து" சிறப்புக் கருத்தரங்கம் மற்றும் ஆசிரியர் இரா. பழனி பாராட்டு விழா*

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் "முத்தமிழைக் காப்போம் முனைந்து" எனும் சிறப்புக் கருத்தரங்கமும், ஆசிரியர் இரா. பழனி அவர்களுக்கான பாராட்டு விழாவும் 23-03-2025, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் ஊற்றங்கரை வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.



 இந்நிகழ்வில் திராவிடர் கழகத்தின் மாவட்ட இணைசெயலாளர் சீனிமுத்து இராஜேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். விடுதலை வாசகர் வட்டத்தின் மாதாந்திர புரவலரும், கிருட்டிணகிரி மாவட்ட திமுக மருத்துவரணித் தலைவருமான மருத்துவர் கை. கந்தசாமி தலைமை தாங்கினார்




. ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் ஒவ்வொரு மாதமும் ஊற்றங்கரை நகரின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றியவர்களைப் பாராட்டி வருகிறது. இந்த வரிசையில், ஊற்றங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சி, திருமண மண்டபம், தமிழ்ச்சங்கம், பகுத்தறிவாளர் கழகம் மற்றும் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் போன்ற பல அமைப்புகளில் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர் இரா. பழனி அவர்கள் இக்கருத்தரங்கில் பாராட்டப்பட்டார். ஆசிரியர் இரா. பழனி அவர்களுக்கும், அவரது துணைவியார் பரிமளா அவர்களுக்கும் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் மருத்துவர் கை. கந்தசாமி பயனாடை அணிவித்துப் பாராட்டினார். விடுதலை வாசகர் வட்ட அறக்கட்டளையின் உறுப்பினரும், கல்வியாளருமான வித்யா மந்திர் கல்வி நிறுவனத்தின் தலைவர் வே. சந்திரசேகரன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். ஊற்றங்கரை ஓய்வுபெற்ற அலுவலர் சங்க செயலாளர் பழ. வெங்கடாசலம் பாராட்டுரை நிகழ்த்தினார். 



அதைத் தொடர்ந்து ஏராளமானோர் பயனாடை அணிவித்துப் பாராட்டினர். கிருட்டிணகிரி மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர் விஜய் இராஜசேகர், ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளர் தணிக்கையாளர் ந. இராசேந்திரன், திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பெ. கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்புரை ஆற்றினர்.



 தணிக்கையாளர் லோகநாதன் சேகர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் படத்தைத் திறந்து உரையாற்றினார். வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு ஊற்றங்கரை நகர திமுக அவைத்தலைவர் தணிகைகுமரன், திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.சி. எழிலரசன், வழக்கறிஞர் ஜெயசீலன், எழுத்தாளர் நாணா, கவிஞர் இ. சாகுல் அமீது, மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் அண்ணா சரவணன் ஆகியோர் பயனாடை அணிவித்துச் சிறப்புச் செய்தனர். தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன் "தமிழ்நிலத்தில் தமிழிய ஆளுமையே" எனும் தலைப்பில் மிகச் சிறப்பான உரையை நிகழ்த்தினார்.



 கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் செ. பொன்முடி நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார். ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் செ. சிவராஜ் நன்றி கூற, விழா இனிதே நிறைவு பெற்றது. நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவரும் தொடர்ந்து விடுதலை வாசகர் வட்டம் இதுபோன்ற கருத்தரங்குகளை நடத்த வேண்டும் என்று வேண்டுகோள்


 விடுத்தனர். நிகழ்வின் ஒளிப்படங்களைக் காண : https://photos.app.goo.gl/9pAP92rvKNeQasB4Ahttps://photos.app.goo.gl/9pAP92rvKNeQasB4A

Wednesday, 12 February 2025

உணர்வுபூர்வமாக எழுச்சியுடன் நடைபெற்ற “பெரியார் எனும் பெரு நெருப்பு” சிறப்பு கருத்தரங்கம்































ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் பெரியார் எனும் பெரு நெருப்பு”  எனும் சிறப்பு கருத்தரங்கம் 11/02/2025  செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் ஊற்றங்கரை ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் வெகு சிறப்புடன்  நடைபெற்றது

 

இந் நிகழ்விற்கு திராவிடர் கழகத்தின் மாவட்ட இணை செயலாளர் சீனிமுத்து.இராஜேசன்  வரவேற்புரை நிகழ்த்த சட்டக் கல்லுரி மாணவி பெ.விண்ணரசி தொடக்க உரையாற்றி தொடங்கி வைத்தார். கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் செ.பொன்முடி தலைமை தாங்கினார்.

 

கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோ.திராவிடமணி  அரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.தமிழ் செல்வன் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயலாளர் பழ.வெங்கடாசலம் திருப்பத்தூர்  மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.சி.எழிலரசன் ஆகியோர் உணர்வுபூவமான உரையை நிகழ்த்தினர் .கவிஞர் இ.சாகுல் அமீது அவர்கள் சிறப்புரையாற்றினார்

 

ஊற்றங்கரை  விடுதலை வாசகர் வட்டத்தின் மாதந்திர புரவலாராக இணைத்துக் கொண்ட தணிக்கையாளர் லோகநாதன் சேகர் “இந்தியா அன்றும் –இன்றும்” என்கிற நூலை எழுதிய எழுத்தாளர் நாராயணசாமி நிகழ்வில் தனது பிறந்த நாளை கொண்டாடிய அரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.தமிழ் செல்வன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தமிழர் பண்பாட்டு விழாவில் பங்கேற்று தாயகம் திரும்பிய வழக்கறிஞர் ஜெயசீலன்   ஆகியோருக்கு ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் திருப்பத்தூர்  மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.சி.எழிலரசன் சிறப்பு செய்தார்

 

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் செயலாளர் பழ.பிரபு நிகழ்ச்சியினை ஒருங்கிணைக்க ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக செயலாளர்  செ.சிவராஜ்  நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது . நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.பங்கேற்ற அனைவரும்  தொடர்ந்து விடுதலை வாசகர் வட்டம் இது போன்ற கருத்தரங்குகளை நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்