விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Thursday, 14 June 2012

அனைத்தும் தருவது கிராமம் - பலனடைவது நகரமா? ஊற்றங்கரை வாசகர் வட்டத்தில் தமிழர் தலைவர்



ஊற்றங்கரை, ஜூன் 13- அனைத்தும் தரக்கூடியது கிராமம் என்றாலும், அதனால் பயனடைவது நகரமே என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
கிருட்டிணகிரி மாவட்டம் திருப்பத்தூர் கழக மாவட்டம், ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட 19ஆம் மாத தொடர் கருத்தரங்கம் ஊற்றங்கரை கல்லாவிச்சாலையில் உள்ள திருமணக்கூடத்தில் 9.6.2012 சனிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விடுதலை வாசகர் வட்ட தலைவரும், தி.மு.க இலக்கிய அணியின் மாவட்ட துணைச்செயலா ளருமான தணிகை ஜி.கருணாநிதி வரவேற்புரையாற் றினார். வாசகர் வட்ட பொருளாளர் அண்ணா அப்பாசாமி மாத அறிக்கையை படித்தார். வேலூர் மண்டல செயலாளரும்,  வாசகர் வட்ட அமைப் பாளருமான பழ.வெங்கடாசலம் விழா அறிமுக உரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு ஆர்.சி.சர்சின் புனித அந்தோனியர் அருட்தந்தை அ.ஜோசப் தலைமையேற்றும், பேரூராட்சி தலைவர் சு.பூபதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும் முன்னாள் தி.மு.க ஒன்றிய பொறுப்பாளருமான வ.சாமிநாதன், மருத்துவர் வெ.தேவதாசு, காமராசு அறக்கட்டளைத் தலைவர் டி.எஸ். திருநாதன், மாநில திராவிடர் மகளிர் பாசறை பொருளாளர் எ.அகிலா ஆகியோர் முன்னிலை யேற்று உரையாற்றினார்.
தி.மு.க நகர செயலாளர் பாபு சிவக்குமார் ஒன்றிய செயலாளர் எக்கூர் த.செல்வம், நொச்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ச.அசோகன் (விடுதலை சிறுத்தைகள்) இர.திருநாவுக்கரசு இந்திய காங்கிரஸ், க.அசோக் மாவட்ட தலைவர் திரிணாமுல் காங் கிரஸ், ஜூ.அ.கோபாலன் தமிழ்சங்கம், இரா.வேங் கடம், ஓய்வுபெற்றோர் அலுவலர் சங்கம், சி.சுவாமி நாதன், இர.பழனி தமிழ்சங்கம், ஜெயலட்சுமி முன்னாள் பேரூராட்சி தலைவர், சரவணன் (வி.சி) மற்றும் பலர் திராவிடர் கழக தலைவர் அவர்களுக்கு சிறப்பு செய்தனர்.
அடிகளார் படத்திறப்பு
அதியமான் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் சீனி.திருமால் முருகன் தவத்திரு குன்றக்குடி அடிகளார் படத்தை திறந்து வைத்து பேசினார். வடஅமெரிக்கா தமிழ் சங்க தலைவர் முனைவர் தண்டபாணி குப்புசாமி அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தண் டபாணி அவர்களுக்கும் அவரது துணைவியார் அவர்களுக்கும்  தமிழர் தலைவர் சிறப்பு செய்தார். தண்டபாணி குடும்பத் தினர் தமிழர் தலைவருக்கு சிறப்பு செய்தனர். அமெ ரிக்க தமிழ்சங்க தலைவர் தண்டபாணி ஏற்புரை வழங்கி பேசும்போது பல துறைகளில் பல விஞ்ஞா னிகள் உருவாகுகிறார்கள். ஆனால் தந்தை பெரியாரை விட ஒரு விஞ்ஞானி கிடை யாது. நான் பார்த்ததும் இல்லை, உருவத்தில் ஆசி ரியர் சற்று சிறியவராக இருந்தாலும், உணர்வில் தந்தை பெரியாரைப்போல பெரியவராக இருக்கிறார். தமிழர் தலைவர் அவர் களால்தான் புதியதொரு சமுதாயத்தை உருவாக்க முடியும். சமூக தீமைகளை ஒழித்து கட்ட முடியும். ஆசிரியரை பல ஆண்டுகளுக்கு முன்பே அவரு டன் பேசி இருக்கிறேன். அவருடன் பல நிகழ்ச் சிகளிலே பங்கேற்றிருக்கிறேன். அமெரிக்காவிற்கு நான் போகும்போது தமிழ்பேசக் கூடியவர்கள் என மூன்று நான்கு பேர்கள் மட்டுமே இருந்தார்கள். ஆனால் இன்று அந்த இடத்தில் 30,40 குடும்பங்களே வசிக்கின்றன. யார் எங்கு இருந்தாலும் தமிழன் என்ற உணர்வுடன் வாழ்கிறோம் என்பதில் மகிழ்ச்சி, ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் என்னை அழைத்து சிறப்பு செய்து பாராட்டியமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.
தமிழர் தலைவர் உரை
இறுதியாக தமிழர் தலைவர் நிறைவுரையாற் றினார்.  உரையில் குறிப் பிட்டதாவது ஊற்றங் கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெறுகிற கருத் தரங்க நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து கொண் டிருக்கிறது. சமத்துவச் சிந்தனை என்ற தலைப் பில் என்னை உரை நிகழ்த்த அழைத் திருக்கிறார்கள் இந்த நிகழ்வு எடுத்துக் காட்டான நிகழ்வு. இந்த மேடையைப் பார்த் தாலே, இங்கே அமர்ந் திருப்பவர்களை பார்த்தாலே தெரியும். சமத்துவம் எப்படி என்று. இந்த பகுதியிலே எளிமை யான கிராமத்தில் பிறந்து, தான் பிறந்த மண்ணுக்கும், மக்களுக்கும் தொண்டு செய்வது தலையாய கடமை என்ற அளவில் அமெரிக்கா தமிழ்ச்சங்க தலைவர் குப்புசாமி தண்டபாணி, அவரது துணைவர் அவரது மகன் ஆகியோருக்கு எனது பாராட்டுகள்! பசி நேரத்தில் வயிற்று பசி என்று வந்தால் அதுதான் முதலில் நிற்கும்.
அந்த வகையில் நான் கருத்து பசி கொண்டவன்! மேடையை பார்த்தாலே இங்கே சமத்துவம் தெரி கிறது. அறிவுத்தந்தையாக ஆசானாக தந்தை பெரி யாரிடம் பயின்றவன் என்ற முறையிலே என்னுடைய கல்வியைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஜெயகாந்தன் அவர்களின் அத்தையின் பள்ளியாக திண்ணைப் பள்ளியிலே படித்துள்ளேன். அதை தொடர்ந்து 1 முதல் 6ஆம் வகுப்பு வரை கிருத்துவப் பள்ளியிலே படித்தேன். கிருத்துவ பாதிரி யார்கள் எனக்கு ஆசிரியர்களாக இருந்திருக் கிறார்கள்.
வடஅமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தண்டபாணி அவர்களுக்கு ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் அவரது தொண்டினைப் பாராட்டி தமிழர் தலைவர் கி.வீரமணி நினைவு பரிசினை வழங்கினார் (9.6.2012).
எல்லாத் துறைகளிலும் மாறுபட்டவர்களாக வேறுபட்டவர்களாக இருந்தாலும் கூட பெரியாரின் விடுதலை வாசகர்கள் தான் எது நம்மை பிரிக்கிறதோ அதை நீக்கி எது நம்மை இணைக் கிறதோ அதில் ஒன்றுபட்டுக் கூடியிருக்கிறோம். மற்றவர் உரிமையை ஏற்கக்கூடிய பண்பாடுதான் சுயமரியாதை இயக்க பண்பாடு, பெரியார் கொள்கையின் பண்பாடு, ஏன் எதற்கு எப்படி என்பதுதான் பகுத்தறிவு. அரசியல் சட்டத்தில் 51ஆவது ஏ பிரிவில் அறிவியல் மனப்பான்மை  பற்றி கூறி உள்ளது. சமத்துவத்திற்கு நேர் எதிரான தத்துவம் என்ன? அதுதான் மனுதர்ம தத்துவம்! பணக்காரன் ஏழை என்ற ஏழ்மை நிலை எல்லா நாடுகளிலும் உள்ளது உலகில் 300 பில்லியன் மக்கள் ஏழ்மையில்  வாழ்வதாக  கூறுகிறது; ஆனால் ஜாதி பேதம் இருக் கிறதே இந்தியாவில் ஞானபூமி, பாரத பூமி, பிறவி யினால் கீழ்ஜாதி, தொடக்ககூடிய ஜாதி, தொடக் கூடாத ஜாதி, பார்க்கக் கூடாத ஜாதி, பார்க்கும் ஜாதி என இந்தியாவில் தானே உள்ளது. 1980 முதல் தண்ட பாணி அரசு என்ற நண்பர் மூலம் அறிமுகமானவர். வெளிநாடுகளில் அவருடன் பேசி இருக்கிறேன்.
புத்தரையே விரட்டிவிட்டார்களே!
ஜாதியை எதிர்த்து முதலில் போராடியவர் கௌதம புத்தர் அவர்கள். ஆனால் அவரையே நாட்டைவிட்டு விரட்டி விட்டார்கள்.
ஜாதி வேண்டாம் என்றுதான் மதம் மாறி கிருத்துவத்திற்குப் போனார்கள். அங்கேயும் இந்த நிலை என்பது வேதனையானது!
1944ஆம் ஆண்டில் கிராமசீர்த்திருத்தம் என்ற நூலில் பெரியார் எழுதி இருக்கிறார்; மேல் ஜாதி  கீழ் ஜாதி என்பதில் சமத்துவம் வரவேண்டும் என்பதை போல கிராமத்தார், நகரத்தார் என்ற பேதம் ஒழிய வேண்டும் என்றார்.
அனைத்தையும் தருவது கிராமம். பலனடைவது நகரம். கிராமம் நகரம் என்ற வேறுபாடு இல்லாத் திட்டம் தேவை என்றார் பெரியார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த தமிழர் தலைவருக்கு ஜோலார்பேட்டை தந்தை பெரியார் சிலை அருகே கழக கொடிகளுடன் கழகத் தோழர்கள் உற்சாக முழக்கமிட்டு வரவேற்பு அளித்தனர் (9.6.2012)
கிராமம் என்ற சொல் கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிராம வர்த்தகர்களுக்கு என்ற வார்த்தையிலிருந்து உருவானது. நகர்ப்புறத்துக்கு எந்த வசதி உள்ளதோ அதைப் போலதான் கிராமத்திற்கு வேண்டும் என்றார் பெரியார். சமத்துவம் என்பது மனிதர்களுக்கு மட்டும் அல்ல, மண்ணுக்கு மட்டும் அல்ல, அனை வருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என் பதுதான். பெரியாரின் கருத்து காலத்தை வென்ற கருத்து! பிறர் துன்பத்தை நினைக்கிறவர்கள்தான் மனிதர் களாக வாழமுடியும். வாழ்க! வளர்க!!
இவ்வளவு சிறப்பாக ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் வளர்ந்துள்ளது வாழ்க மேலும் வளர்க என்று தனது உரையில் தமிழர்தலைவர் தெரிவித்தார்.
விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ. பிரபு விழாவை ஒருங் கிணைத்து நடத்தினார். ஆடிட்டர் ந.இராசேந் திரன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியின் சிறப்பு
தமிழர் தலைவர் ஊற் றங்கரை வருகையொட்டி அண்ணாசிலை 4 சாலை யிலிருந்து திருமணக் கூடம் வரை கழகக் கொடி களும், தோரணங்களும், பதாகைகளுமாக கொடிக் காடாக காட்சியளித்தது.
வந்திருந்த அனை வருக்கும் இடையே தேநீர் விருந்து அளிக்கப்பட் டது. மதிய உணவு ஏற் பாடு செய்யப்பட்டிருந் தது.
நொச்சிப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் கா.அசோகன் விடுதலை ஆயுள் சந்தா ரூ.10ஆயிரம் அறிவித்தார். ரூ.200 மாலைக்குப் பதில் அளித்தார்.
அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் கழகத்திற்கு ரூ.10 ஆயிரம் நிதியினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (ஊற்றங்கரை, 9.6.2012)
அதியமான் கல்வி நிறுவனர் ரூ.10 ஆயிரம் தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் தமிழர் தலைவர் கிவீரமணி முன்னிலையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் படத்தினைத் திறந்து வைத்தார் (ஊற்றங்கரை, 9.6.2012)
கவிஞர் சாகுல் அமீத் கவிதை பாடினார். நிகழ்ச்சியில் தருமபுரி, கிருட்டிணகிரி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களிலிருந்து கழகத் தோழர்களும், தோழியர்களும், பொறுப்பாளர் களும் வருகை தந்து சிறப்பித்தனர்.
பாண்டவர்குட்டையில் கழகப் பணிமனை அமைக்க தமது நிலத்தின் ஆவணங்களை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் மாநில ப.க. துணைத் தலைவர் அண்ணா சரவணன், மகளிர் பாசறை மாவட்ட செயலாளர் இந்திரா காந்தி, அன்பரசன், அம்சா ஆகியோர் வழங்கினர் (9.6.2012).
கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் தா.திருப்பதி அவர்களின் 80ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி அவருக்கு பயனாடை அணிவித்து தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். (ஊற்றங்கரை, 9.6.2012)



.

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் எடுத்துக்காட்டான வாசகர் வட்டம்

        
                    தமிழர் தலைவர் பாராட்டி சிறப்புரை
                           மிகச் சிறப்புடன் நடைபெற்ற முனைவர் .தண்டபாணி குப்புசாமி பாராட்டு விழா மற்றும் கருத்தரங்கம்


ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 19 ஆம் நிகழ்வாக வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் தலைவர் .முனைவர் .தண்டபாணி குப்புசாமி அவர்களுக்கு பாராட்டு விழாவும் சிறப்பு கருத்தரங்கமும் கடந்த  ஜூன் மாதம் 9 ஆம் நாள் சனிக்கிழமை காலை 10 மணி அளவில் ஊற்றங்கரை திருமண கூடத்தில் நடைப்பெற்றது ,தமிழர் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்
              முன்னதாக மாநில பக துணைத் தலைவர் அண்ணா .சரவணன் விடுதலை நாளிதழ் குறித்த பாடலை பாடி நிகழ்ச்சியினை துவக்கினார் . திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளரும் வாசகர் வட்ட தலைவருமான தணிகை .ஜி .கருணாநிதி அவர்கள் விடுதலை வைப்பு நிதியாக ருபாய் 25000 அளிப்பதாக அறிவித்து முதல் தவணையாக ருபாய் 1000  அளித்து  வரவேற்புரை ஆற்றினார்   .வாசகர் வட்ட பொருளாளர் அண்ணா .அப்பாசாமி அவர்கள் தனது சீன வெளிநாட்டு பயணத்தின் போது விடுதலை வாசகர் வட்ட செயல்பாட்டிற்காக  வாங்கிய ஒலிபெருக்கியினை தமிழர் தலைவர் முன்னிலையில் வாசகர் வட்ட தலைவர் தணிகை .கருணாநிதியிடம் அளித்து   மாத அறிக்கை வாசித்தார்  .திராவிடர் கழகத்தின் மண்டலசெயலாளரும் வாசகர் வட்ட அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம் அவர்கள் தனது பிறந்த நாளை ஒட்டி தமிழர் தலைவரிடம் விடுதலை வைப்பு நிதியாக ருபாய் 1000 வழங்கி  விழா அறிமுக உரை ஆற்றினார்
                                        இந்த  நிகழ்ச்சிக்கு  .ஊற்றங்கரை பேருராட்சி தலைவர் சு.பூபதி அவர்களும் ,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும் மேனாள் ஊற்றங்கரை ஒன்றிய திமுக பொறுப்பாளருமான வ .சுவாமிநாதன் அவர்களும் ,ஊற்றங்கரை இந்திய மருத்துவ சங்கத் தலைவருமான வெ.தேவராசு அவர்களும் ,காமராஜ் அறக்கட்டளையின் தலைவர் டி.எஸ்.திருநாதன் அவர்களும் ,திராவிடர் மகளிர் பாசறையின் பொருளர் எ.அகிலா அவர்களும்,திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் வி.ஜி.இளங்கோ அவர்களும் கலந்து கொண்டு முன்னிலை வகித்து உரையாற்றினர்
                          தவத்திரு குன்றக்குடி அடிகளார் படத்தினை அதியமான் கல்வி நிறுவனகளின் நிறுவனர் சீ.திருமால் முருகன் திறந்து வைத்து விடுதலை வைப்பு நிதியாக ருபாய் 10000 த்தை அளித்து விடுதலை வாசகர் வட்ட செயல்பாடுகள் குறித்து பாராட்டி உரையாற்றினார் .வருகை புரிந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைகள் நூல் நினைவு பரிசாக வழங்கப் பட்டது    ஊற்றங்கரை பேருராட்சி தலைவர் சு.பூபதி அவர்களுக்கு தமிழ்ச் சங்க பொருளாளர் இர.பழனி அவர்களும் ,தலைமை தாங்கிய அந்தோனியார் ஆர்.சி.சர்ச்சின் அருட்தந்தை அ.ஜோசப் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகளின் மாவட்ட துணைச் செயலாளர் சா.அசோகன் அவர்களும் மேனாள் ஊற்றங்கரை ஒன்றிய திமுக பொறுப்பாளர்  வ .சுவாமிநாதன் அவர்களுக்கு திரிணாமுல் காங்கிரெஸ் மாவட்ட தலைவர் க.அசோக் அவர்களும் ஊற்றங்கரை இந்திய மருத்துவ சங்கத் தலைவருமான வெ.தேவராசு அவர்களுக்கு தமிழ்ச் சங்க தலைவர் கீ .ஆ .கோபாலன் அவர்களும் காமராஜ் அறக்கட்டளையின் தலைவர் டி.எஸ்.திருநாதன் அவர்களுக்கு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயலாளர் இரா .வேங்கடம் அவர்களும் திராவிடர் மகளிர் பாசறையின் பொருளர் எ.அகிலா அவர்களுக்கு பெரியார் வீர விளையாட்டுக் கழக செயற்குழு உறுப்பினர் அழகுமணி அவர்களும் அதியமான் கல்வி நிறுவனகளின் நிறுவனர் சீ.திருமால் முருகன் அவர்களுக்கு ஒன்றிய திமுக செயலாளர் எக்கூர் செல்வம் அவர்களும் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் வி.ஜி.இளங்கோ அவர்களுக்கு நகர திமுக செயலாளர் பாபு சிவக்குமார் அவர்களும் நினைவுப் பரிசு வழங்கினர்

விடுதலை சந்தா

          ஊற்றங்கரை இந்திய மருத்துவ சங்கத் தலைவர்  வெ.தேவராசு அவர்களின் மகன் மருத்துவர் கவின் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்ததின் மகிழ்வாக தமிழர் தலைவரிடம் ருபாய் 500 வழங்கினார் .விடுதலை சிறுத்தைகளின் மாவட்ட துணைச் செயலாளரும் நொச்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவருமான  சா.அசோகன் விடுதலைக்கு ஆயுள் சந்தா அளிப்பதாக உறுதி அளித்து முதல் தவணையாக ருபாய் 2500  அளித்தார்

மருந்து பொருட்கள் அன்பளிப்பு

                          விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் ஒவ்வொரு மாதமும் மருத்துவர்களுக்கு அளிக்கப்படும் சாம்பிள் மருந்துகள் சேகரிக்கப்பட்டு பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபடுகிறது .இம் மாதம் சேகரிக்கப் பட்ட மருந்து பொருட்களை ஊற்றங்கரை மண்டல மருந்து வியாபாரிகள் சங்க பொருளாளர் செந்தாமரைசெல்வன் அவர்களும் ஊற்றங்கரை நகர மருந்து வியாபாரிகள் சங்க பொருளாளர் இர.திருநாவுக்கரசு அவர்களும் தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினார்

வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் தலைவர் .முனைவர் .தண்டபாணி குப்புசாமி அவர்களின் தன் விவரக் குறிப்பினை  ஒய்வு பெற்ற ஆசிரியர் செண்பகவல்லி வாசித்தார் . முனைவர் தண்டபாணி அவர்களை பாராட்டி கவிஞர் சாகுல் அமீத் கவிதை வாசித்தார் .திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் முனைவர் தண்டபாணி அவர்களுக்கும் அவரது வாழ்விணையர் வளர்மதி அவர்களுக்கும் சால்வை அணிவித்து பாராட்டி விடுதலை வாசகர் வட்டத்தின் நினைவு பரிசு வழங்கினார் .முனைவர் தண்டபாணி அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்

80 ஆம் பிறந்தநாள்

                       விரைவில் தனது 80 ஆம் பிறந்த நாளை கொண்டாடவிருக்கும் கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர்  தா .திருப்பதி அவர்களை வாழ்த்தி அவருக்கு திராவிடர் கழகம் சார்பிலும் ,விடுதலை வாசகர் வட்டம் சார்பிலும் தமிழர் தலைவர் அவர்கள் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார் .அந்தோணியார் ஆர்.சி .சர்ச்சின் அருட்தந்தை அ.ஜோசப் அவர்கள் தலைமை உரை ஆற்றினார்

     .நிறைவாக சமத்துவ சிந்தனைகள் என்னும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவரும் தமிழர் தலைவருமான ஆசிரியர் வீரமணி அவர்கள் கருத்துரை ஆற்றினார் தமிழர் தலைவர் அவர்களுக்கு ஊற்றங்கரை பேரூராட்சியின் தலைவர் சு.பூபதி நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார்  .வாசகர் வட்டத்தின் துணைச் செயலாளர் ஆடிட்டர் ராசேந்திரன் நன்றி உரை ஆற்றினார்  .வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு விழாவை ஒருங்கிணைத்தார்

       இந்த நிகழ்வில் திராவிட கழக சட்ட துறை  செயலாளர் வீரசேகரன் ,தலைமை செயற்குழு உறுப்பினர் க.பார்வதி , தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் தமிழ்ச்செல்வன் ,மண்டல செயலாளர் தியாகராசன் ,பக தலைவர் ஊமை.ஜெயராமன் ,மாநில பக பொறுப்பாளர் தமிழ்செல்வி ,வித்யா மந்திர் கல்வி நிறுவங்களின் நிறுவனர் வே.சந்திரசேகரன் ,முன்னால் பேரூராட்சி தலைவரும் விடுதலைசிறுத்தைகளின்  மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் ஜெயலட்சுமி , விடுதலை சிறுத்தைகளின் ,ஒன்றியசெயலாளர் நாசி.சரவணன் ,மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் வே .கிருட்டினமூர்த்தி ,மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் கோவிந்தசாமி ,அரிமா சங்க பொறுப்பாளர் முத்து ,சந்திரசேகரன் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னுசாமி , ஓட்டல் சங்கத் தலைவர் அரிமா . ராஜா ,உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள் ,கழகத் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்

                அரங்கத்தின் நுழைவு வாயிலில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் பிஸ்கட் ,குர்குரே ,குறிப்பேடு ,எழுதுகோல் ,நிகழ்ச்சின் இடையில் தேநீர் ,இறுதியில் மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது ,.இதுவரை வாசகர் வட்டத்தால் பாராட்டப் பட்ட பிரமுகர்களுடன் தமிழர் தலைவர் மதிய உணவு அருந்தி ஊற்றங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் பழைய மாணவர்களால் அமைக்கப் பட்டுள்ள கணினி நூலகத்தை பார்வையிட்டார்  ,இது போன்ற கருத்தரங்குகள் அடிக்கடி நடத்த வேண்டும் என வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்