விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Monday, 4 June 2012

வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் தலைவர் முனைவர் .தண்டபாணி அவர்களுக்கு பாராட்டு விழா


      அன்புடன் அழைக்கிறோம் !
வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் தலைவர்  முனைவர் .தண்டபாணி குப்புசாமி                 அவர்களுக்கு பாராட்டு விழா
                                                                              மற்றும்
                       சிறப்பு கருத்தரங்கம்

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 19 ஆம் நிகழ்வாக வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் தலைவர் .முனைவர் .தண்டபாணி குப்புசாமி அவர்களுக்கு பாராட்டு விழாவும் சிறப்பு கருத்தரங்கமும் வருகிற ஜூன் மாதம் 9 ஆம் நாள் சனிக்கிழமை காலை 10 மணி அளவில் ஊற்றங்கரை திருமண கூடத்தில் நடைபெற உள்ளது
திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளரும் வாசகர் வட்ட தலைவருமான தணிகை .ஜி .கருணாநிதி வரவேற்ப்புரை ஆற்றுகிறார் .வாசகர் வட்ட பொருளாளர் அண்ணா .அப்பாசாமி அவர்கள் மாத அறிக்கை வாசிக்கிறார் .திராவிடர் கழகத்தின் மண்டலசெயலாளரும் வாசகர் வட்ட அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம் விழா அறிமுக உரை ஆற்றுகிறார் .

                            இந்த  நிகழ்ச்சிக்கு புனித அந்தோனியார் ஆர் .சி .சர்ச் அருட்தந்தை அ.ஜோசப் அவர்கள் தலைமை தாங்குகிறார் .ஊற்றங்கரை பேருராட்சி தலைவர் சு.பூபதி அவர்களும் ,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும் மேனாள் ஊற்றங்கரை ஒன்றிய திமுக பொறுப்பாளருமான வ .சுவாமிநாதன் அவர்களும் ,ஊற்றங்கரை இந்திய மருத்துவ சங்கத் தலைவருமான வெ.தேவராசு அவர்களும் ,காமராஜ் அறக்கட்டளையின் தலைவர் டி.எஸ்.திருநாதன் அவர்களும் ,திராவிடர் மகளிர் பாசறையின் பொருளர் எ.அகிலா அவர்களும் முன்னிலை வகிக்கின்றனர்
                          தவத் திரு குன்றக்குடி அடிகளார் படத்தினை அதியமான் கல்வி நிறுவனகளின் நிறுவனர் சீ.திருமால் முருகன் திறந்து வைத்து உரையாற்றுகின்றார்
வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் தலைவர் .முனைவர் .தண்டபாணி குப்புசாமி அவர்கள் பாராட்டப் படவிருக்கிறார் .நிறைவாக சமத்துவ சிந்தனைகள் என்னும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவரும் தமிழர் தலைவருமான ஆசிரியர் வீரமணி அவர்கள் கருத்துரை ஆற்றுகின்றார் .ஆடிட்டர் ராசேந்திரன் நன்றி உரை ஆற்றுகின்றார் .வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு விழாவை ஒருங்கிணைக்கிறார்
அனைவரும் வருக !வருக !என்று அன்புடன் அழைக்கிறோம்

No comments:

Post a Comment