ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 19
ஆம் நிகழ்வான விடுதலை நாளிதழின் ஆசிரியர் மானமிகு தமிழர் தலைவர் .கி
.வீரமணி அவர்கள் பங்கேற்கும் சிறப்பு கருத்தரங்கில் பாராட்டு பெறும் வடஅமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் தலைவரும் USA தென் கரோலினா மருத்துவப் பல்கலைக் கழக இருதய நோய் மருத்துவ இணைப் பேராசிரியருமான முனைவர்.கு
.தண்டபாணி அவர்கள் 1954 ஆம் வருடம் ஜூலை 26 அன்று ஊற்றங்கரைக்கு அருகில் உள்ள
மகனூர்ப்பட்டி கிராமத்தில் குப்புசாமி கண்ணம்மாள் வாழ்விணையருக்கு இரண்டாம் மகனாய் பிறந்தவர்
தனது தொடக்க கல்வியை மகனூர்ப்பட்டி அரசினர் தொடக்கப் பள்ளியிலும் ,உயர்நிலைக் கல்வியை பேராம்பட்டு அரசினர் உயர் நிலைப் பள்ளியிலும் தமிழ் வழிக் கல்விக் கற்றார் .1975 ஆம் ஆண்டு திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் வேதியியல் (B .Sc )பட்டப் படிப்பை முடித்தார் .அதன் பின்னர் உயிர் வேதியியலில் ( BioChemistry ) முது நிலை பட்டப்படிப்பையும் (M .Sc ),M Phil பட்ட படிப்பையும் முடித்து 1984 ஆம் வருடம் சென்னை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் ( Ph .D ) பெற்றார் .பிறகு நியூயார்க் நகரில் அமைந்துள்ள Mt .Sinai மருத்துவ மனையில் முதுமுனைவர் ஆய்வறிஞ்சராக (postdoctoral fellow )பணியில் சேர்ந்தார் .
இக் கால கட்டத்தில் Washington university school of medicine இல் புற்றுநோய் பிரிவில் research scientist ஆக பணியாற்றினார் . 1986 முதல் 1993 வரை St Louis இல் இவரது பணி தொடர்ந்தது .தற்போது தென்கரோலினா மருத்துவ பல்கலைக் கழகத்தில் மருத்துவ இருதய நோய் பிரிவில் இணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார் .உயர் இரத்த அழுத்தத்தினால் இருதயத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ச்சி பணியை மேற்கொண்டு வருகிறார் . இவரின் 18 ஆண்டுகள் ஆராய்ச்சிகளின் பயனாக இருதய நோய் ,இரத்த அழுத்தம் தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகள் ,நாற்பதுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் வெளியிட்டு உள்ளார்.பல நூல்களில் ஆய்வாளர்களுடன் ஒருங்கு சேர்ந்து 35 தலைப்புக்களில் கருத்து தொகுப்பு சுருக்கங்கள் வெளியிடப்பட்டு உள்ளன . மேலும் தமிழ்நாட்டிலிருந்து செல்லும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு அறிய வழிகாட்டியாய் நின்று உதவி வருகிறார் .
1981 ஆம் வருடம் சென்னை பல்கலை கழகத்தின் ''சிறந்த சமுக சேவைப் பணியாளர் விருது ''இவருக்கு வழங்கப்பட்டது .American Heart Association ,American Physiological Society , International society for Heart Research, American Society for Biochemistry and Molecular Biology ஆகிய அமைப்புகளில் தொடர்ந்து இவர் அங்கம் வகித்து பணியாற்றி வருகிறார் .
வட அமெரிக்காவில் உள்ள, ஐக்கிய அமெரிக்கா மாகாணங்களில் உள்ள தமிழ்ச்சங்கங்கள், கனடா நாட்டில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் ஆகியவற்றை ஒரு குடையின் கீழ்க் கொண்ட கூட்டமைப்பாக வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது .இவர் இந்த அமைப்பின் துணைத்தலைவராய் பொறுப்பேற்று கடந்த ஆண்டில் ஜூலை மாதம் தமிழகத்தில் இருந்து அறிஞர் பெருமக்கள் பலரையும் அழைத்து 24 ஆம் ஆண்டு தமிழ் சங்க விழாவினை மிக சிறப்பாக நடத்தி பெருமை சேர்த்தவர் .வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின், 2012-2014 ஆண்டிற்க்கான தலைவராக கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப் பட்டவர்
இளம் வயது முதலே தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளாலும் ,தமிழ் உணர்வினாலும் ஈர்க்கப்பட்ட முனைவர் தண்டபாணி அவர்களின் தந்தை குப்புசாமி அவர்களே ஜாதி மறுப்பு மணம் புரிந்தவர் .தந்தை வழியில் பொறியியல் படிப்பில் எம்.எஸ் தகுதியுடன் ஆய்வக பணியை மேற்கொண்டவருமான வளர்மதி அவர்களை வாழ்விணையறாய் ஏற்றுக்கொண்டார் .இவர்களது அன்பு மகன் வசந்தன் மருத்துவ பொறியியல் கல்வி பயின்று வருகிறார் .திரு.வசந்தன் அவர்கள் தன் இளம் பருவத்திலேயே பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தன் தந்தையின் சொந்த ஊரான மகனூர்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு பள்ளிக் கட்டிடம் ,குடிநீர் வசதி ,மின் இணைப்புடன் தளவாட பொருட்கள் முதலான பல வசதிகளை செய்து தந்து உள்ளார்
முனைவர் தண்டபாணி அவர்களின் மற்றொரு சகோதரர் திரு .சண்முகம் தூய நெஞ்சக் கல்லூரியின் ஒய்வு பெற்ற இயற்பியல் துறை பேராசிரியர் ஆவார் .மற்றொரு சகோதரி திருமதி.செயலட்சுமி வரதராசுலு அவர்கள் ஆசிரியர் பணியில் இருந்து பணி நிறைவடைந்துள்ளார்

No comments:
Post a Comment