விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Friday, 14 November 2014

குழந்தைகளுக்கான குறும்படம் திரையிடல்












ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 4ஆம் நிகழ்வான குழந்தைகள் தின விழாவை முன்னிட்டுகுழந்தைகளுக்கான குறும்படம் திரையிடல் ஊற்றங்கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை 1௦ மணியளவில் நடைபெற்றது
  இந்த நிகழ்விற்கு கூடுதல் உதவி தொடக்ககல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார் . ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன் அவர்களும் ,உச்சநீதிமன்ற நீதிபதி நீதியரசர் பானுமதி அவர்களின் சகோதரியும் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை புவனேஸ்வரி அவர்களும் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக மண்டல செயலாளரும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் அமைப்பாளருமான பழ .வெங்கடாசலம் அவர்களும் , ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் துணைத்தலைவர் இர .வேங்கடம் அவர்களும் குழந்தைகள் தின வாழ்த்துக்களை கூறி வாழ்த்துரையாற்றினார்
    வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு அவர்கள் குறும்படங்கள் குறித்த அறிமுக உரையாற்றிட ‘’தேர்வு ‘’ பரிசு’’ ‘’1மார்க்‘’ ‘’மக்கு’’ பேரறிஞர் அண்ணாவின் செவ்வாழை போன்ற குறும்படங்கள் திரையிடப்பட்டது மாணவர்கள் குதுகலத்துடன் கைத்தட்டி குறும்படங்களை ரசித்தனர் .ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட தலைவர் தணிகை.ஜி.கருணாநிதி அவர்களின் ஏற்பாட்டில் மாணவர்கள் அனைவருக்கும் பிஸ்கட் மற்றும் இனிப்புக்கள் வழங்கப்பட்டன நிறைவாக ஆசிரியர் பழனி நன்றி உரையாற்றினார்  
இந்த நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் ஆசிரியர் ஆசிரியை பெருமக்களும் வாசகர் வட்ட துணைத்தலைவர் சாமிநாதன் ,நிருபர் கீ .ஆ கோபாலன் ,திராவிடர் கழக நகர அமைப்பாளர் அண்ணா.அப்பாசாமி,வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர் சிவராஜ் , வாசகர் வட்ட பொருளாளர் ஆடிட்டர் ராஜேந்திரன் ,சாரணர் இயக்க பொறுப்பாளர் ஆசிரியர் கணேசன் நேசம் தொண்டு நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் குணசேகரன் ,ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் . ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் இந்த மாணவர் நலப்பணிக்கு  பள்ளியின் சார்பில் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது 

No comments:

Post a Comment