ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட 43ஆம் நிகழ் வாக மாணவர்களுக்கான கருத்தரங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் நாள் ஊற்றங் கரை சீறி வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் காலை 10 மணி அள வில் நடைபெற்றது ஊற்றங் கரை விடுதலை வாசகர் வட் டமும் சீறி வித்யா மந்திர் கல்லூரியின் நாட்டுநலப் பணிகள் திட்டமும் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கத் திற்கு ஊற்றங்கரை நகர கல்வித்தந்தையும் சீறி வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனருமான வே.சந்திர சேகரன் அவர்கள் தலைமை தாங்கினார்.
கல்லூரியின் முதல்வரும், சேலம் பெரியார் பல்கலை கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினருமான க.அருள் அவர்களும், செயலாளர் செங்கோடன் அவர்களும் விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் பழ.வெங்கடா சலம், விடுதலை வாசகர் வட்ட செயலர் பழ.பிரபு ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக வித்யா மந்திர் கல்லூரியின்நாட்டுநலப் பணித் திட்ட அலுவலர் திருமுருகன் வரவேற்புரையாற்றினார்.
மருத்துவம் எதிர்நோக்கும் சவால்களும் மாணவர்களின் கடமையும்என்கிற தலைப் பில் தமிழக அரசின் பல் நோக்கு மருத்துவமனையின் மூளை நரம்பு தண்டுவட மருத்துவர் ஜெ.மரியானோ ஆண்டோ புருனோ அவர் கள் பவர் பாய்ன்ட் மூலம் மகப்பேறு மருத்துவத்தில் மருத்துவ உலகம் அடைந் துள்ள வெற்றிகள் குறித்தும் மரணமில்லா மகப்பேறு மருத்துவம் என்கிற இலக் கினை எதிர்காலத்தில் அடைந் திட மாணவ சமுதாயம் ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும் சிறப்பான முறை யில் விளக்கினார்
மருத்துவம் எதிர்நோக்கும் சவால்களும் மாணவர்களின் கடமையும்என்கிற தலைப் பில் தமிழக அரசின் பல் நோக்கு மருத்துவமனையின் மூளை நரம்பு தண்டுவட மருத்துவர் ஜெ.மரியானோ ஆண்டோ புருனோ அவர் கள் பவர் பாய்ன்ட் மூலம் மகப்பேறு மருத்துவத்தில் மருத்துவ உலகம் அடைந் துள்ள வெற்றிகள் குறித்தும் மரணமில்லா மகப்பேறு மருத்துவம் என்கிற இலக் கினை எதிர்காலத்தில் அடைந் திட மாணவ சமுதாயம் ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும் சிறப்பான முறை யில் விளக்கினார்
அவரை தொடர்ந்து கல்வி வேலை வாய்ப்பு-சமூகநீதி என்கிற தலைப்பில் யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங் கத்தின் அகில இந்திய பொதுச்செயலர் கோ.கருணா நிதி அவர்கள் பவர்பாய்ன்ட் மூலம் இடஒதுக்கீட்டின் தோற்றம் வளர்ச்சி வேலை வாய்ப்பு குறித்து மிக விரிவாக புள்ளிவிவரங்களுடன் மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.
முன்னதாக வருகை தந்த சிறப்புவிருந்திர்களான மருத்துவர் ஜெ.மரியானோ ஆண்டோ புருனோ அவர்க ளுக்கும், யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங் கத்தின் அகில இந்திய பொதுச்செயலர் கோ .கருணாநிதி அவர்களுக்கும் சீறி வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறு வனருமான வே.சந்திரசேகரன் அவர்கள் பயனாடை அணி வித்து சிறப்பு செய்தார்.
நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் பார்த்தீபன் நிகழ்ச் சியினை ஒருங்கிணைத்தார்.
நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் பார்த்தீபன் நிகழ்ச் சியினை ஒருங்கிணைத்தார்.
மதிய உணவு இடை வேளைக்கு பின்னர் அதிய மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாலை 2 மணி அளவில் சீனி வாசன் கல்வி அறக்கட்ட ளையும் ஊற்றங்கரை விடு தலை வாசகர் வட்டமும் இணைந்து மாணவர் கருத் தரங்கை நடத்தியது. இந்த கருத்தரங்கத்திற்கு ஊற்றங் கரை அதியமான் கல்வி நிறு வனங்களின் நிறுவனருமான சீனி.திருமால்முருகன் அவர் கள் தலைமை தாங்கினார். அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யின் முதல்வர் ஷோபா திருமால்முருகன் அவர்கள் முன்னிலை வகித்தார். வருகை தந்திருந்த வாசகர் வட்ட அமைப்பாளர் பழ. வெங்கடாசலம் அவர்களுக்கும்,
விடுதலை வாசகர் வட்ட செயலர் பழ.பிரபு அவர்களுக்கும், வாசகர் வட்ட துணைத் தலைவர் இர.வேங்கடம் அவர்களுக் கும், மருத்துவர் ஜெ.மரி யானோ ஆண்டோ புருனோ அவர்களுக்கும், யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் அகில இந் திய பொதுச்செயலர் கோ. கருணாநிதி அவர்களுக்கும் கல்லூரியின் சார்பில் நிரு வனர் சீனி.திருமால்முருகன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்
இந்த இரண்டு கல்லூரி நிகழ்ச்சி யிலும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங் கேற்று பயனடைந்தனர், நிகழ்ச்சியில் விடுதலை வாசகர் வட்ட தலைவரும் மாவட்ட திமுக கலை இலக் கிய பகுத்தறிவுப் பேரவையின் அமைப்பாளர் தணிகை. ஜி.கருணாநிதி, பகுத்தறிவா ளர் கழகத்தின் மாநில துணைத்தலைவர் அண்ணா. சரவணன், வாசகர் வட்ட பொருளாளர் ஆடிட்டர் ராஜேந்திரன், வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர்கள் அண்ணா.அப்பாசாமி, செ.சிவராஜ், ஆசிரியர் எஸ்.ஏ.காந்தன், ஆசிரியர் சுரேஷ், கவிதா, ஆசிரியர் கமலநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment