விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Friday, 7 July 2017

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் ICICI வங்கி மற்றும் அனைத்து வணிகர்கள் சங்கம் இணைந்து நடத்தும் GST (சரக்கு மற்றும் சேவை வரி )குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்



நாள் :  05 /07/17 புதன் கிழமை  மாலை 5 மணியளவில்
இடம் :மகேந்திரா வணிக வளாகம் ,icici  வங்கி அருகில்
               சேலம் மெயின் ரோடு  ஊற்றங்கரை

வணிகவரி அலுவலர்கள் ,வங்கி அதிகாரிகள் ,நிதி  ஆலோசகர்கள்  தணிக்கையாளர்கள் ,வணிகர் சங்க பெருமக்கள் பலரும் கலந்து கொள்ளும் GST (சரக்கு மற்றும் சேவை வரி )குறித்த விளக்க நிகழ்வு மற்றும்  முதலீட்டாளர்கள்(investor’s)விழிப்புணர்வு கருத்தரங்கம்
அனைவரும் வருக !                                        அனுமதி இலவசம் !!
                                         நிகழ்ச்சி நிரல்
வரவேற்புரை : திருமிகு .பாலாஜி
                        வங்கி மேலாளர் அய்.சி.அய்.சி .அய் வங்கி ஊற்றங்கரை

தலைமை :திருமிகு . தணிகை .ஜி .கருணாநிதி
                   தலைவர் ,ஊற்றங்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளை
                  தலைவர் ,ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்

விழா அறிமுக உரை :ஆடிட்டர் .ந .இராசேந்திரன்

தொடங்கி வைப்பவர்கள் :ஆடிட்டர் .ஆர் .மகபூப்கான்
                                                    ஆடிட்டர் .ஜி.சத்தியமூர்த்தி

முன்னிலை :திருமிகு .எஸ்.செங்கோடன்
                            தலைவர் அனைத்து வணிகர் சங்கம் ஊற்றங்கரை
                        திருமிகு .இர.உமாபதி
                            செயலர் அனைத்து வணிகர் சங்கம் ஊற்றங்கரை
                        திருமிகு .வி.கஜேந்திரன்
                                 தலைவர் அனைத்து வணிகர் சங்கம் சிங்காரப்பேட்டை

                                                 சிறப்பு விருந்தினர்கள் ;

                                            திருமிகு .அசோக் குமார்
                        மண்டல அதிகாரி அய்.சி.அய்.சி .அய் வங்கி

                                  திருமிகு .எஸ்.இரவிக்குமார்
                                                வணிகவரி அலுவலர் அரூர்

                                  திருமிகு .எஸ் .சத்தியநாராயணன்
                                             வணிகவரி அலுவலர்  கிருட்டிணகிரி


கூட்ட  அரங்கில் வணிகர்களுக்கு GST-யில் பதிவு செய்வதற்கு வேண்டிய ஆவணங்கள் குறித்த வழிகாட்டுதலும் ,ஏற்கனவே  வாட் வரி ,சேவை வரி சட்டத்தில் பதிவு பெற்றவர்கள் GST-யில் மாற்றம் செய்து கொள்ளவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது ,தக்க ஆவணங்களுடன் வருகைதந்து வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்                                                 
GST குறித்த காணொளி  நிகழ்வினை தொடங்கி வைத்து விளக்க  உரை

                   ஆடிட்டர் .எஸ்..ஏ.கே .ஆசாத்  கிருட்டிணகிரி
                            ஆடிட்டர் .ஜெகன்   தருமபுரி
                        ஆடிட்டர் கே .பாலசுப்ரமணியம்  சேலம்
                          ஆடிட்டர் .எம்.முருகேசன் ஓசூர்
வணிகர்களின்  சந்தேகங்களுக்கு பதில் அளித்து விளக்க உரை                    
              ஆடிட்டர் .எச் லியாகத் அலி கிருட்டிணகிரி
               ஆடிட்டர் சேகர் தருமபுரி
              ஆடிட்டர்  கே.கே .ரவி (எ) வீரப்பன்   சேலம்
            ஆடிட்டர் எம் .சபீர் உசேன் கிருட்டிணகிரி
           ஆடிட்டர் .பி .பாலசுந்தரம்  ஓசூர்
           ஆடிட்டர் எஸ். திலகவதி  ஓசூர்

நன்றியுரை  :திருமிகு .சித.வீரமணி
                              துணை செயலர்  விடுதலை  வாசகர் வட்டம்

                                                                   






                          நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்கும் திருவாளர்கள்
ஆர் .ஆர் .லாலா லஜபதி பொருளாளர் அனைத்து வணிகர் சங்கம் ஊற்றங்கரை
என் .மாதவமுனிராஜ் துணை தலைவர் அனைத்து வணிகர் சங்கம் ஊற்றங்கரை
எம் .பழனி செட்டி துணை செயலர் அனைத்து வணிகர் சங்கம் ஊற்றங்கரை
இர .சங்கரன் தலைவர் ஜவுளி வியாபாரிகள் சங்கம் ஊற்றங்கரை
இர.திருநாவுக்கரசு  மாநில  து.தலைவர்  சி.வி மருந்து வணிகர்கள் சங்கம் ஊற்றங்கரை
டி.சுந்தர்  நகை வணிகர்கள் சங்கம் ஊற்றங்கரை
ஆர்.கே .இராஜா ஓட்டல் வியாபாரிகள் சங்கம் ஊற்றங்கரை
கிருஷ்ணன் ஹார்ட்வேர் வியாபாரிகள் சங்கம் ஊற்றங்கரை
கே.தாமரை செலவன் எலக்ட்ரிகல் &எலக்ட்ரானிக்ஸ்  சங்கம் ஊற்றங்கரை
எஸ்.சுரேஷ் அச்சக உரிமையாளர்கள் சங்கம் ஊற்றங்கரை
பா .அமானுல்லா  புட்வேர்ஸ் வணிகர்கள் சங்கம் ஊற்றங்கரை
முருகன் தானிய மண்டி வணிகர்கள் சங்கம் ஊற்றங்கரை
சேகர் காய்கறி கடை வணிகர்கள் சங்கம் ஊற்றங்கரை
சந்திரன் தேநீர் கடை வணிகர்கள் சங்கம் ஊற்றங்கரை
ரவிகுமார்  புத்தக கடை வணிகர்கள் சங்கம் ஊற்றங்கரை
போனெக்ஸ்.சுப்பிரமணி தையல் கலைஞர்கள் சங்கம் ஊற்றங்கரை
சந்தோஷ் உரக்கடை வணிகர்கள் சங்கம் ஊற்றங்கரை
ஷாஜகான் ஜூஸ் கடை வணிகர்கள் சங்கம் ஊற்றங்கரை
ராம்மூர்த்தி பேருந்து நிலைய கடை கள் வணிகர்கள் சங்கம் ஊற்றங்கரை
யாசின் பழக்கடை வணிகர்கள்  சங்கம் ஊற்றங்கரை
ஆறுமுகம் கறிக்கடை வணிகர்கள் சங்கம் ஊற்றங்கரை
யமஹா கார்த்தி  இரு சக்கர வணிகர்கள் சங்கம் ஊற்றங்கரை
சி .இராதாகிருஷ்ணன் செயலர் அனைத்து வணிகர் சங்கம் சிங்காரப்பேட்டை
எஸ்.எஸ்.வடிவழகன்  பொருளர் அனைத்து வணிகர் சங்கம் சிங்காரப்பேட்டை
எஸ்.எல் .கலீல் து.தலைவர் அனைத்து வணிகர் சங்கம் சிங்காரப்பேட்டை
ஆர் .முகுந்தன் து.செயலர் அனைத்து வணிகர் சங்கம் சிங்காரப்பேட்டை
மற்றும் ஊற்றங்கரை  இரும்பு ,டைல்ஸ் வணிகர் சங்க பொறுப்பாளர்கள்

விடுதலை வாசகர் வட்டத்தின் 77ஆம் மாத நிகழ்வாக ஆவணப்படங்கள் திரையிடல் நிகழ்வு





ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 77ஆம் மாத நிகழ்வாக ஆவணப்படங்கள் திரையிடல் நிகழ்வு கடந்த மே மாதம் 30ஆம் நாள் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் ஊற்றங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது
நிகழ்விற்கு ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டதுணை செயலர் சித.வீரமணி அவர்கள் வரவேற்புரையாற்றினார் .வாசகர் வட்ட துணைத்தலைவர் அண்ணா.அப்பாசாமி அவர்கள் விழா அறிமுக உரையாற்றினார் ,வாசகர் வட்டத்தின் தலைவரும் ,மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் அமைப்பாளருமான தணிகை ஜி கருணாநிதி அவர்கள் தலைமை தாங்கி ஆவணப்படங்கள் திரையிடும் நோக்கத்தை குறித்து விவரித்து தலைமை உரையாற்றினார்
 தோழர் காரல் மார்க்ஸ் அவர்களின் 2௦௦ ஆம்ஆண்டு பிறந்த நாளையொட்டி திரையிடப்பட்ட காரல்மார்க்ஸ் குறித்த ஆவணப்படத்தினை மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் வே.கிருட்டிணமூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்து காரல்மார்க்ஸ் வாழ்க்கை குறித்த தமது கருத்துக்களை பதிவு செய்து உரையாற்றினார்
இரண்டாம் ஆவணப்படமாக கலைஞர் தொலைக்காட்சியினரால் தொகுக்கப்பட்ட கீழடி குறித்த ஆவணப்படத்தினை கவி.செங்குட்டுவன் அவர்கள் உரையாற்றி தொடங்கி வைத்தார் கவி.செங்குட்டுவன் அவர்கள் தனது உரையில் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்க பெற்ற தமிழர் நாகரிக சான்றுகள் குறித்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசு கடைப்பிடித்து வரும் தமிழர் விரோத போக்கு குறித்தும் உரையாற்றினார்
மூன்றாம் ஆவணப்படமாக முள்ளிவாய்க்கால் கொடுமைகள் குறித்து திரையிடப்பட்டது .திராவிடர் கழக மாநில மாணவரணி துணை செயலர் யாழ்திலீபன் தொடங்கி வைத்து முள்ளிவாய்க்கால் கொடுமைகள் குறித்தும் உலக தமிழர்கள் இனி ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கினார் நிகழ்வினை வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு ஒருங்கிணைத்தார் .நிறைவாக மாவட்ட இளைஞரணி செயலாளர் செ.சிவராஜ் நன்றியுரையாற்றினார்
நிகழ்வில் பங்கேற்ற பலரும் மிகச்சிறந்த ஆவணப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டுள்ளதாகவும் ,பல்வேறு புதிய செய்திகள் மிக எளிமையாக உணர்ந்து கொள்ளும் வகையில் ஆவணப்படங்கள் அமைந்ததாகவும் வாசகர் வட்ட பொறுப்பாளர்களை பாராட்டினர் .இது போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து நடத்திட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர் 

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் 77ஆம் மாத நிகழ்வு !வட்ட்டம்





நாள் :30/05 /2௦17 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி
இடம் :அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஊற்றங்கரை


தலைமை :மானமிகு .தணிகை .ஜி .கருணாநிதி
          தலைவர் .விடுதலை வாசகர் வட்டம்
முதல் ஆவணப்படம் :
தோழர்.காரல்மார்க்ஸ் அவர்களின் 2௦௦ ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி
    காரல்மார்க்ஸ் -- வரலாற்று ஆவணம்
ஆவணப்படத்தினை தொடங்கி வைப்பவர் :
திருமிகு .வே .கிருஷ்ணமூர்த்தி 
     மேனாள் சட்ட மன்ற உறுப்பினர்
இரண்டாம் ஆவணப்படம்
கீழடி - ஓர் வரலாற்று ஆய்வு ஆவணம்
தொடங்கி வைப்பவர் : திருமிகு .கவி.செங்குட்டுவன்
மூன்றாம் ஆவணப்படம்
ரணம் -முள்ளிவாய்க்கால் நினைவுகள்
தொடங்கி வைப்பவர் :மானமிகு .த.மு.யாழ் திலீபன்
மாநில மாணவரணி துணை செயலர் திராவிடர் கழகம்
தமிழ் சமூகம் கண்டுணர வேண்டிய முக்கியமான மூன்று ஆவணப்படங்களின் திரையிடல்  அனைவரும் வருக !

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் நடத்திய முப்பெரும் விழா !

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 76ஆவது மாத நிகழ்வாக கடந்த 29.04.2017சனிக்கிழமை காலை 1௦ மணியளவில் ஊற்றங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 127 ஆவது பிறந்தநாள் விழா, .திராவிடர் கழகத்தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் பாகம் 12 நூல் வெளியீட்டு விழா  மற்றும் கல்வியாளர் வா.செ.குழந்தைசாமி அவர்களின் படத்திறப்பு விழா என முப்பெரும் விழாவாக  நடைபெற்றது

இந் நிகழ்விற்கு ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் அண்ணா.அப்பாசாமி வரவேற்புரை நிகழ்த்தினார் .ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட துணை செயலர் சித.வீரமணி அவர்கள் விழா அறிமுக உரையாற்றினார் .வாசகர் வட்டத்தின் தலைவரும் ,திமுக கலை,இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாவட்ட அமைப்பாளருமான தணிகை ஜி கருணாநிதி தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார்
திராவிடர் கழக மாவட்ட மகளிரணி செயலர் கவிதா இளங்கோ ,வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் இரா.தெய்வம் ,அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் மாலா ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்
தமிழர் தலைவர் ஆசிரியர் .கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘’வாழ்வியல் சிந்தனைகள் பாகம் 12  நூலை அறிமுகப்படுத்தி திராவிடர் கழக மாநில அமைப்பு செயலர்  மானமிகு .ஊமை.செயராமன் வெளியிட்டார் .பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் அண்ணா .சரவணன் சுகாதாரம்நலப்பணிகள் மேனாள் இணை இயக்குனர் மருத்துவர் வெ.தேவராசு ,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பெ.பொன்னுசாமி அரசு பெண்கள மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் யுவராஜ் , உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பெ.வெங்கடாசலம் ,இரா .தென்னவன் ,சு.கோவிந்தராசு,நெடுஞ்செழியன்  கமலநாதன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் நேரு , தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலர் செ.வெங்கடேசன் த.நா.தொ.பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயலர் மா .கிருஷ்ணமூர்த்தி, தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலர் செ.இராசேந்திரன் த.தொ.ப.ஆசிரியர் மன்றத்தின் வட்டார செயலர் மாம்.கி.ஞானசேகரன் அரசு துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன்  த.தொ.ப ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலர் மோகன் குமார் ,தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலர் எஸ்.லீலா கிருஷ்ணன்,தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் சசிகுமார் ,திராவிடர் கழக நகர தலைவர் இரா.வேங்கடம் ,நகர செயலர் முனி.வெங்கடேசன் ,ஒன்றிய மகளிரணி பொறுப்பாளர் முருகம்மாள் ஆசிரியர் .இராமமூர்த்தி,ஆசிரியர் சி.மணிமாறன் மாணவர் அமைப்பின் பொறுப்பாளர் கற்பூர சுந்தரபாண்டியன்,மேனாள் மத்தூர் ஒன்றிய செயலர் செ.பொன்முடி
அரிமா சங்க பொறுப்பாளர் இராசா ,நகர வளர்ச்சி அறக்கட்டளையின் செயலர் செ.ஆனந்த் , உள்ளிட்ட பலரும் நூலினை பெற்று கொண்டார்கள்

வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,அதியமான் கல்வியியல் கல்லூரி சார்பில் தலா 1௦ நூல்களும் ,வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் நூல்களும் பெற்றுக்கொண்டார்கள் ,வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு நூல்கள் அளித்து சிறப்பு செய்யப்பட்டது ,சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து கவிஞர் சாகுல் அமீது உரையாற்றினார்

மேனாள் மேலவை உறுப்பினரும் ,தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் நிறுவனரும் முதன்மை பொதுச்செயலருமான செ.முத்துசாமி அவர்கள் கல்வியாளர் வா.செ குழந்தைசாமி அவர்களின் படத்தினை திறந்து புகழுரை நிகழ்த்தினார்,நிறைவாக ‘’புதுவை தந்த புரட்சிக்கவி ‘’ என்கிற தலைப்பில் நாமக்கல் நாதன் சிறப்புரையாற்றினார்.மாவட்ட இளைஞரணி தலைவர் செ.சிவராஜ் நன்றியுரை நிகழ்த்த விழா நிறைவு பெற்றது 
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பான மதிய உணவு வழங்கப்பட்டது .இது போன்ற நிகழ்வுகளை விடுதலை வாசகர் வட்டம் தொடர்ந்து நடத்திட வேண்டுமென கலந்து கொண்ட பலரும் வேண்டுகோள் விடுத்தனர்,நிகழ்வினை வாழ்த்தியும் பொறுப்பாளர்களை பாராட்டியும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கடிதம் அனுப்பி இருந்தார்