விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Friday, 7 July 2017

விடுதலை வாசகர் வட்டத்தின் 77ஆம் மாத நிகழ்வாக ஆவணப்படங்கள் திரையிடல் நிகழ்வு





ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 77ஆம் மாத நிகழ்வாக ஆவணப்படங்கள் திரையிடல் நிகழ்வு கடந்த மே மாதம் 30ஆம் நாள் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் ஊற்றங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது
நிகழ்விற்கு ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டதுணை செயலர் சித.வீரமணி அவர்கள் வரவேற்புரையாற்றினார் .வாசகர் வட்ட துணைத்தலைவர் அண்ணா.அப்பாசாமி அவர்கள் விழா அறிமுக உரையாற்றினார் ,வாசகர் வட்டத்தின் தலைவரும் ,மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் அமைப்பாளருமான தணிகை ஜி கருணாநிதி அவர்கள் தலைமை தாங்கி ஆவணப்படங்கள் திரையிடும் நோக்கத்தை குறித்து விவரித்து தலைமை உரையாற்றினார்
 தோழர் காரல் மார்க்ஸ் அவர்களின் 2௦௦ ஆம்ஆண்டு பிறந்த நாளையொட்டி திரையிடப்பட்ட காரல்மார்க்ஸ் குறித்த ஆவணப்படத்தினை மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் வே.கிருட்டிணமூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்து காரல்மார்க்ஸ் வாழ்க்கை குறித்த தமது கருத்துக்களை பதிவு செய்து உரையாற்றினார்
இரண்டாம் ஆவணப்படமாக கலைஞர் தொலைக்காட்சியினரால் தொகுக்கப்பட்ட கீழடி குறித்த ஆவணப்படத்தினை கவி.செங்குட்டுவன் அவர்கள் உரையாற்றி தொடங்கி வைத்தார் கவி.செங்குட்டுவன் அவர்கள் தனது உரையில் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்க பெற்ற தமிழர் நாகரிக சான்றுகள் குறித்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசு கடைப்பிடித்து வரும் தமிழர் விரோத போக்கு குறித்தும் உரையாற்றினார்
மூன்றாம் ஆவணப்படமாக முள்ளிவாய்க்கால் கொடுமைகள் குறித்து திரையிடப்பட்டது .திராவிடர் கழக மாநில மாணவரணி துணை செயலர் யாழ்திலீபன் தொடங்கி வைத்து முள்ளிவாய்க்கால் கொடுமைகள் குறித்தும் உலக தமிழர்கள் இனி ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கினார் நிகழ்வினை வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு ஒருங்கிணைத்தார் .நிறைவாக மாவட்ட இளைஞரணி செயலாளர் செ.சிவராஜ் நன்றியுரையாற்றினார்
நிகழ்வில் பங்கேற்ற பலரும் மிகச்சிறந்த ஆவணப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டுள்ளதாகவும் ,பல்வேறு புதிய செய்திகள் மிக எளிமையாக உணர்ந்து கொள்ளும் வகையில் ஆவணப்படங்கள் அமைந்ததாகவும் வாசகர் வட்ட பொறுப்பாளர்களை பாராட்டினர் .இது போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து நடத்திட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர் 

No comments:

Post a Comment