ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 76ஆவது மாத நிகழ்வாக கடந்த 29.04.2017சனிக்கிழமை காலை 1௦ மணியளவில் ஊற்றங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 127 ஆவது பிறந்தநாள் விழா, .திராவிடர் கழகத்தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் பாகம் 12 நூல் வெளியீட்டு விழா மற்றும் கல்வியாளர் வா.செ.குழந்தைசாமி அவர்களின் படத்திறப்பு விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது
இந் நிகழ்விற்கு ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் அண்ணா.அப்பாசாமி வரவேற்புரை நிகழ்த்தினார் .ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட துணை செயலர் சித.வீரமணி அவர்கள் விழா அறிமுக உரையாற்றினார் .வாசகர் வட்டத்தின் தலைவரும் ,திமுக கலை,இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாவட்ட அமைப்பாளருமான தணிகை ஜி கருணாநிதி தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார்
திராவிடர் கழக மாவட்ட மகளிரணி செயலர் கவிதா இளங்கோ ,வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் இரா.தெய்வம் ,அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் மாலா ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்
தமிழர் தலைவர் ஆசிரியர் .கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘’வாழ்வியல் சிந்தனைகள் “பாகம் 12 நூலை அறிமுகப்படுத்தி திராவிடர் கழக மாநில அமைப்பு செயலர் மானமிகு .ஊமை.செயராமன் வெளியிட்டார் .பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் அண்ணா .சரவணன் சுகாதாரம்& நலப்பணிகள் மேனாள் இணை இயக்குனர் மருத்துவர் வெ.தேவராசு ,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பெ.பொன்னுசாமி அரசு பெண்கள மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் யுவராஜ் , உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பெ.வெங்கடாசலம் ,இரா .தென்னவன் ,சு.கோவிந்தராசு,நெடுஞ்செழியன் கமலநாதன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் நேரு , தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலர் செ.வெங்கடேசன் த.நா.தொ.பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயலர் மா .கிருஷ்ணமூர்த்தி, தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலர் செ.இராசேந்திரன் த.தொ.ப.ஆசிரியர் மன்றத்தின் வட்டார செயலர் மாம்.கி.ஞானசேகரன் அரசு துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன் த.தொ.ப ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலர் மோகன் குமார் ,தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலர் எஸ்.லீலா கிருஷ்ணன்,தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் சசிகுமார் ,திராவிடர் கழக நகர தலைவர் இரா.வேங்கடம் ,நகர செயலர் முனி.வெங்கடேசன் ,ஒன்றிய மகளிரணி பொறுப்பாளர் முருகம்மாள் ஆசிரியர் .இராமமூர்த்தி,ஆசிரியர் சி.மணிமாறன் மாணவர் அமைப்பின் பொறுப்பாளர் கற்பூர சுந்தரபாண்டியன்,மேனாள் மத்தூர் ஒன்றிய செயலர் செ.பொன்முடி
அரிமா சங்க பொறுப்பாளர் இராசா ,நகர வளர்ச்சி அறக்கட்டளையின் செயலர் செ.ஆனந்த் , உள்ளிட்ட பலரும் நூலினை பெற்று கொண்டார்கள்
வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,அதியமான் கல்வியியல் கல்லூரி சார்பில் தலா 1௦ நூல்களும் ,வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் 4 நூல்களும் பெற்றுக்கொண்டார்கள் ,வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு நூல்கள் அளித்து சிறப்பு செய்யப்பட்டது ,சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து கவிஞர் சாகுல் அமீது உரையாற்றினார்
மேனாள் மேலவை உறுப்பினரும் ,தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் நிறுவனரும் முதன்மை பொதுச்செயலருமான செ.முத்துசாமி அவர்கள் கல்வியாளர் வா.செ குழந்தைசாமி அவர்களின் படத்தினை திறந்து புகழுரை நிகழ்த்தினார்,நிறைவாக ‘’புதுவை தந்த புரட்சிக்கவி ‘’ என்கிற தலைப்பில் நாமக்கல் நாதன் சிறப்புரையாற்றினார்.மாவட்ட இளைஞரணி தலைவர் செ.சிவராஜ் நன்றியுரை நிகழ்த்த விழா நிறைவு பெற்றது
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பான மதிய உணவு வழங்கப்பட்டது .இது போன்ற நிகழ்வுகளை விடுதலை வாசகர் வட்டம் தொடர்ந்து நடத்திட வேண்டுமென கலந்து கொண்ட பலரும் வேண்டுகோள் விடுத்தனர்,நிகழ்வினை வாழ்த்தியும் பொறுப்பாளர்களை பாராட்டியும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கடிதம் அனுப்பி இருந்தார்
No comments:
Post a Comment