ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் என்பது அரசியல் ,ஜாதி ,கட்சி ,மதம் ,ஆத்திகம்,நாத்திகம் ,பேதமின்றி தந்தை பெரியார் ,அறிஞர் அண்ணா,பச்சை தமிழன் காமராஜர் ,தமிழர் தலைவர் வீரமணி ,விடுதலை ,மற்றும் உண்மை ஏடுகளால் கவரப்பட்ட மனித நேய சிந்தனையாளர்களின் அமைப்பு
விடுதலை வாசகர் வட்டம்

Monday, 23 April 2012
எழுச்சியுடன் நடைப்பெற்ற திராவிடர் இயக்க 100 ஆம் ஆண்டு விழா கருத்தரங்கம்
நடைபெற்றது .
விழா தொடங்குவதற்கு முன்னதாக விடுதலை வாசகர் வட்ட பொருளர் அண்ணா.அப்பாசாமி அவர்களின் தாயார் தீத்தா அம்மாள் மறைவிற்கும் ,வாசகர் வட்ட உறுப்பினர் சிவலிங்கம் அவர்களின் சகோதரர் எஸ் .ஜெகதீசன் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது .
இவ் விழாவிற்கு விடுதலை வாசகர் வட்டத்தின் துணைச் செயலாளர் ஆடிட்டர்.ந .இராசேந்திரன் அவர்கள் வரவேற்பு ஆற்றினார் .விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளாளர் அண்ணா .அப்பாசாமி மாத அறிக்கை வாசித்தார் .
விடுதலை வாசகர் வட்ட புரவலரும் மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவருமானஅண்ணா .சரவணன் அவர்கள் விழா அறிமுக உரை ஆற்றினார்
கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் த.திருப்பதி அவர்களும் ,விடுதலை வாசகர் வட்ட தலைவரும் மாவட்ட திமுக இலக்கிய அணி செயலாளருமான தணிகை .ஜி.கருணாநிதி அவர்களும் முன்னிலை வகித்து உரையாற்றினர் .
வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் ஊற்றங்கரைத் தமிழ்ச் சங்க செயலாளரும் விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம் அவர்களுக்கு தருமபுரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் அ.தமிழ்ச்செல்வன் அவர்களும்
,விடுதலை வாசகர் வட்ட தலைவரும் மாவட்ட திமுக இலக்கிய அணி செயலாளருமான தணிகை .ஜி.கருணாநிதி அவர்களுக்கு ஊற்றங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னுசாமிஅவர்களும்
கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் த.திருப்பதி அவர்களுக்கு ஊற்றங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் கணேசன் அவர்களும் ,
,திராவிடர் கழக மகளிர் பாசறையின் பொருளர் எ .அகிலா அவர்களுக்கு எழுத்தாளர் .பிரதிபா லெனின் அவர்களும்
தருமபுரி மாவட்ட முரசொலி மூத்த பத்திரிக்கையாளர் கே.மணி அவர்களுக்கு நகர திமுக அவைத் தலைவர் அம்மானுல்லா அவர்களும் ''வீரமணி ஓர் விமர்சனம் ''நூலினை அளித்து சிறப்பு செய்தனர்
.ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார்.இம் மாதம் நகரின் திராவிட இயக்க மூத்த உறுப்பினர் வ.சுவாமிநாதன் அவர்கள் திராவிட இயக்கத்திற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக நினைவு பரிசு அளித்து பாராட்ட்டப்பட்டார்
.ஊற்றங்கரைத் தமிழ்ச் சங்க செயலாளரும் விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம்,மாவட்ட திமுக துணை செயலாளர் ராசா,திமுக ஒன்றிய செயலாளர் எக்குர்.செல்வம் ,திமுக நகர அவைத் தலைவர் ,ஊற்றங்கரை பெற்றோர் ஆசிரியர் கழக உறப்பினர்கள் ரமேஷ் சிங் ,மணி ,ஊற்றங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னுசாமி ,மேனாள் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் தேவராஜன், மேனாள் ஊற்றங்கரை பேரூராட்சியின் தலைவர் பொன்.பரமசிவம் உள்ளிட்ட பலரும் பாராட்டுரை.நிகழ்த்தினர்
தருமபுரி மாவட்ட முரசொலி மூத்த பத்திரிக்கையாளர் கே.மணி அவர்கள் திராவிடர் சங்கத்தை நிறுவிய மருத்துவர் நடேசனார் படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார் .
திராவிடர் கழக மகளிர் பாசறையின் பொருளர் எ .அகிலா அவர்கள் இக் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கி மிகச் சிறப்பானதொரு தலைமையுரையை ஆற்றினார்
நிறைவாக நக்கீரன் இதழின் தலைமை துணை ஆசிரியர் .கோவி.லெனின் அவர்கள் ''திராவிட இயக்கம் சொன்னதை செய்தது செய்ததை சொன்னதா ? என்கிற தலைப்பில் திராவிட இயக்கத்தின் தோற்றம் குறித்தும் ,நடேசனார் ,டி.எம் .நாயார் ,சர் .ஏ .டி .பன்னீர் செல்வம் ஆற்றிய தொண்டுகளை விளக்கி தந்தை பெரியார் வரவுக்கு பின் திராவிட இயக்கத்தின் மாற்றம் குறித்து விளக்கி அண்ணா ,கலைஞர் ஆற்றிய சமுக அரசியல் பணிகளை பட்டியலிட்டு அந்த சாதனைகள் இன்னும் சரியாக சொல்லப்படவே இல்லை அந்த பணியினை இந்த நூற்றாண்டு விழா கருத்தரங்கில் இருந்து தொடருவோம் என்று எழுச்சிகரமானஆய்வுரையை நிகழ்த்தினார்
விடுதலை வாசகர் வட்டத்தின் செயல்பாடுகளை பாராட்டி தேசிய நல்லாசிரியர் காவேரிப்பட்டினம் கி .விஜயக்குமாரி தியாகராசன் அவர்கள் ருபாய் 1000 அளித்து வாசகர் வட்டத்தில் புரவலாராக இணைத்து கொண்டார் இறுதியாக வாசகர் வட்ட துணைத் தலைவர் இர .வேங்கடம் நன்றியுரை ஆற்றினார்
நிகழ்ச்சியில் பங்கு பெற வந்திருந்த அனைவருக்கும் தமிழர் தலைவரின்
வாழ்வியல் சிந்தனைகள்,திராவிடர் இயக்கம் குறித்த உண்மை கட்டுரை நகலெடுத்து வழங்கப்பட்டது .அரங்கத்தின் நுழைவு
வாயிலில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் பிஸ்கட் ,குர்குரே ,குறிப்பேடு
,எழுதுகோல் ,நிகழ்ச்சின் இடையில் தேநீர் ,இறுதியில் மதிய உணவு
அனைவருக்கும் வழங்கப்பட்டது ,இது போன்ற கருத்தரங்குகள் அடிக்கடி நடத்த
வேண்டும் என வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்.
விழா தொடங்குவதற்கு முன்னதாக விடுதலை வாசகர் வட்ட பொருளர் அண்ணா.அப்பாசாமி அவர்களின் தாயார் தீத்தா அம்மாள் மறைவிற்கும் ,வாசகர் வட்ட உறுப்பினர் சிவலிங்கம் அவர்களின் சகோதரர் எஸ் .ஜெகதீசன் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது .
இவ் விழாவிற்கு விடுதலை வாசகர் வட்டத்தின் துணைச் செயலாளர் ஆடிட்டர்.ந .இராசேந்திரன் அவர்கள் வரவேற்பு ஆற்றினார் .விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளாளர் அண்ணா .அப்பாசாமி மாத அறிக்கை வாசித்தார் .
விடுதலை வாசகர் வட்ட புரவலரும் மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவருமானஅண்ணா .சரவணன் அவர்கள் விழா அறிமுக உரை ஆற்றினார்
கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் த.திருப்பதி அவர்களும் ,விடுதலை வாசகர் வட்ட தலைவரும் மாவட்ட திமுக இலக்கிய அணி செயலாளருமான தணிகை .ஜி.கருணாநிதி அவர்களும் முன்னிலை வகித்து உரையாற்றினர் .
வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் ஊற்றங்கரைத் தமிழ்ச் சங்க செயலாளரும் விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம் அவர்களுக்கு தருமபுரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் அ.தமிழ்ச்செல்வன் அவர்களும்
,விடுதலை வாசகர் வட்ட தலைவரும் மாவட்ட திமுக இலக்கிய அணி செயலாளருமான தணிகை .ஜி.கருணாநிதி அவர்களுக்கு ஊற்றங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னுசாமிஅவர்களும்
கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் த.திருப்பதி அவர்களுக்கு ஊற்றங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் கணேசன் அவர்களும் ,
,திராவிடர் கழக மகளிர் பாசறையின் பொருளர் எ .அகிலா அவர்களுக்கு எழுத்தாளர் .பிரதிபா லெனின் அவர்களும்
தருமபுரி மாவட்ட முரசொலி மூத்த பத்திரிக்கையாளர் கே.மணி அவர்களுக்கு நகர திமுக அவைத் தலைவர் அம்மானுல்லா அவர்களும் ''வீரமணி ஓர் விமர்சனம் ''நூலினை அளித்து சிறப்பு செய்தனர்
.ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார்.இம் மாதம் நகரின் திராவிட இயக்க மூத்த உறுப்பினர் வ.சுவாமிநாதன் அவர்கள் திராவிட இயக்கத்திற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக நினைவு பரிசு அளித்து பாராட்ட்டப்பட்டார்
.ஊற்றங்கரைத் தமிழ்ச் சங்க செயலாளரும் விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம்,மாவட்ட திமுக துணை செயலாளர் ராசா,திமுக ஒன்றிய செயலாளர் எக்குர்.செல்வம் ,திமுக நகர அவைத் தலைவர் ,ஊற்றங்கரை பெற்றோர் ஆசிரியர் கழக உறப்பினர்கள் ரமேஷ் சிங் ,மணி ,ஊற்றங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னுசாமி ,மேனாள் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் தேவராஜன், மேனாள் ஊற்றங்கரை பேரூராட்சியின் தலைவர் பொன்.பரமசிவம் உள்ளிட்ட பலரும் பாராட்டுரை.நிகழ்த்தினர்
தருமபுரி மாவட்ட முரசொலி மூத்த பத்திரிக்கையாளர் கே.மணி அவர்கள் திராவிடர் சங்கத்தை நிறுவிய மருத்துவர் நடேசனார் படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார் .
திராவிடர் கழக மகளிர் பாசறையின் பொருளர் எ .அகிலா அவர்கள் இக் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கி மிகச் சிறப்பானதொரு தலைமையுரையை ஆற்றினார்
நிறைவாக நக்கீரன் இதழின் தலைமை துணை ஆசிரியர் .கோவி.லெனின் அவர்கள் ''திராவிட இயக்கம் சொன்னதை செய்தது செய்ததை சொன்னதா ? என்கிற தலைப்பில் திராவிட இயக்கத்தின் தோற்றம் குறித்தும் ,நடேசனார் ,டி.எம் .நாயார் ,சர் .ஏ .டி .பன்னீர் செல்வம் ஆற்றிய தொண்டுகளை விளக்கி தந்தை பெரியார் வரவுக்கு பின் திராவிட இயக்கத்தின் மாற்றம் குறித்து விளக்கி அண்ணா ,கலைஞர் ஆற்றிய சமுக அரசியல் பணிகளை பட்டியலிட்டு அந்த சாதனைகள் இன்னும் சரியாக சொல்லப்படவே இல்லை அந்த பணியினை இந்த நூற்றாண்டு விழா கருத்தரங்கில் இருந்து தொடருவோம் என்று எழுச்சிகரமானஆய்வுரையை நிகழ்த்தினார்
விடுதலை வாசகர் வட்டத்தின் செயல்பாடுகளை பாராட்டி தேசிய நல்லாசிரியர் காவேரிப்பட்டினம் கி .விஜயக்குமாரி தியாகராசன் அவர்கள் ருபாய் 1000 அளித்து வாசகர் வட்டத்தில் புரவலாராக இணைத்து கொண்டார் இறுதியாக வாசகர் வட்ட துணைத் தலைவர் இர .வேங்கடம் நன்றியுரை ஆற்றினார்
Sunday, 22 April 2012
Wednesday, 18 April 2012
திராவிடர் இயக்க 100 ஆம் ஆண்டு விழாவில் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தால் பாராட்டு பெறும்
திராவிட இயக்க தீரர் வ.சுவாமிநாதன்
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 17 ஆம் நிகழ்வான திராவிடர் இயக்க 100 ஆம் ஆண்டு விழாவில் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தால் பாராட்டு பெறும் ஊற்றங்கரை நகரின் மூத்த திராவிட இயக்க உறுப்பினர் வ.சுவாமிநாதன் அவர்கள் 1934 ஆம் ஆண்டு திரு.வஜ்ஜிரவேல் முதலியார் திருமதிஇராமாயிஅம்மாள் இணையருக்கு மகனாக பிறந்தார் .அவரின் உடன் பிறந்தவர்கள் 3 சகோதரிகள்
1945 ஆம் வருடம் வரை தனது தொடக்க கல்வியை ஊற்றங்கரை ஆரம்ப பள்ளியில் படித்து தனது உயர் நிலைக் கல்வியை 1946 -1950 வரை திருப்பத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார் 1952 -1954 வரை இன்டெர் மீடியட் வகுப்பை வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் பயின்றார்
1952 இல் திருவண்ணாமலையில் சுயேட்ச்சையாக போட்டி இட்ட தனது சித்தப்பா தேவராஜ் முதலியாரை ஆதரித்து தேர்தல் பணியாற்றியதும்,அறிஞர் அண்ணா அவர்களை அழைத்து பிரச்சாரம் செய்ததும் இவரின் முதல் தேர்தல் பணியும் அறிஞர் அண்ணா உடன் ஏற்பட்ட முதல்சந்திப்பும்ஆகும் தனது இன்டெர் மீடியட் கல்வி பயிலும் காலத்தில் முல்லைக் கொம்பையில் முல்லை .வடிவேலு இல்லத்தில் அடிக்கடி தங்கும் தந்தை பெரியார் , அறிஞர் அண்ணா ,டாக்டர் கலைஞர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு முல்லை.வடிவேலு அவர்களின் சகோதரரும் ,வகுப்பு தோழருமான குப்புராமன் மூலமாக இவருக்கும் ,இவருடைய வகுப்பு தோழர்கள் பாலகிருட்டிணன்,கே.ஆர் .கிருட்டிணன் ஆகியோருக்கு கிட்டியது .அப்போது 1953 இல் ஆம்பூரில் நடைப்பெற்ற தூக்குமேடை நாடகத்தில் டாக்டர் கலைஞர் அவர்களும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் இணைந்து நடிக்கும் மேடையில் அவர்களுடன் தானும் தனது வகுப்பு தோழர்களும் அமர்ந்திருந்ததை இன்றும் பெருமையாக கருதுகிறார் .
1957 ஆம் வருடம் இந்திரா அம்மையாருடன் ஊற்றங்கரையில் பல்துறை அறிஞர்கள் வாழ்த்த மன விழா நடைப்பெற்றது .இவ் வாழ்விணையருக்கு 2 மகன்கள் 3 மகள்கள் பிறந்தனர்
1958 -1960 வரை ஊற்றங்கரை வருவாய் ஆய்வாளராகவும் 61 ஆம் ஆண்டு ராசிபுரம் வட்டாட்சியர்
அலுவலகத்திலும் பணியாற்றினார் .1962 இல் கிருடினகிரியில் போட்டியிட்ட கமலநாதன் அவர்களின் வெற்றிக்கும் 1967 ,1971 இல் ஊற்றங்கரை சட்ட மன்ற தொகுதியில் போட்டியிட்ட கே.ஆர் கிருட்டிணன் அவர்களின் வெற்றிக்காகவும் கடுமையான உழைப்பை தந்தார்
முதன்முதலாக ஊற்றங்கரை பஞ்சயத் போர்டு தேர்தலில் 1982 ஆம் ஆண்டு போட்டியிட்டு திரு.தண்டாயுதபாணி அவர்களிடம் 150 வாக்கு வித்தியாசத்தில் தோற்றாலும் 1986 ஆம் ஆண்டு 35
பஞ்சாயத்து உள்ளடங்கிய ஊராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட்டு MGR ஆட்சிக் காலத்தில் காங்கிரெஸ் அதிமுக கூட்டணி இருந்த போதும் 10300 வாக்குகள் அதிகம் பெற்று முதல் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் .1986 முதல் 1991 வரை 14 காங்கிரெஸ் 14 அதிமுக 7 திமுக உறுப்பினர்கள் மட்டுமே இருந்த நிலையில் எவ்வித எதிர்ப்பும் இன்றி 5 எல்லா பஞ்ச்யத்துக்களுக்கும் சிறப்பான அடிப்படை வசதிகளை செய்து இன்றைக்கும் மக்களால் ''சேர்மேன்'' என்று அன்புடன் அழைக்கும் அடைமொழிக்கு சொந்தக்காரர் ஆனார் .இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த காலத்தில் திமுக அறிவித்த போராட்டங்களில் 5 முறை சிறை சென்றார் .இதுவரை கழகம் அறிவித்த போராட்டங்கள் மறியல் என பலவற்றியில் கலந்து கொண்டு தனது பொது வாழ்வில் 9 முறை சிறை சென்றுள்ளார் .
1984 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊற்றங்கரை துப்பாக்கி சூடு கலவரத்தில் திமுக உறுப்பினர் என்கிற ஒரே காரணத்திற்காக குற்ற பத்திரிக்கையில் இவர் பெயர் இணைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒரு மாத கால நிபந்தனை பிணையில் சேலத்தில் கையெழுத்திட்டார்
இவர் உலகின் பல பகுதிக்கட்கு சுற்றுபயணம் செய்தவர் .இங்கிலாந்து தேசத்தில் இரண்டு மாதம் தங்கியிருக்கும் நேரத்தில் இங்கிலாந்து நாட்டின் மேயர் அவர்களின் அன்பான அழைப்பை ஏற்று அவருடன் தேநீர் விருந்தில் கலந்து கொண்டார் .இலண்டன் நகரின் பிரபலமான ஆங்கில பத்திரிகை இவர் மேயருடன் தேநீர் விருந்தில் கலந்து கொண்ட செய்தியுடன் இவரது பேட்டியும் முதல் பக்கத்தில் வெளியிட்டது .பிரான்ஸ்,இத்தாலி ,ஜெர்மனி ,ரோம் உள்ளிட்ட எட்டுக்கு மேற்பட்ட உலக நாடுகளுக்கு பயணம் செய்து உள்ளார் .
ஊற்றங்கரை நில வள வங்கியின் தலைவராக 5 ஆண்டுகளும் .போச்சம்பள்ளி மார்க்கெட்டிங் சொசைட்டி இயக்குனராக 5 ஆண்டுகளும் மத்தூர் நிலவள வங்கியின் இயக்குனராக 5 ஆண்டுகளும் ஊற்றங்கரை திமுக ஒன்றிய பொறுப்பாளராகவும் 5 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார் .அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் தலைவராக 20 ஆண்டுகள் ,ஊற்றங்கரை திருமண கூடம் பொறுப்பாளராக 20 ஆண்டுகள் தொடர்ந்து திறம்பட பணியாற்றி வருகிறார் .அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் ஒரு கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட கணினி நூலகத்திற்கு நன்கொடையை சேர்த்து தருவதில் வித்யா மந்திர் நிறுவனர் சந்திரசேகருடன் இவர் ஆற்றிய பணி குறிப்பிட தகுந்தது
பத்துக்கும் மேற்ப்பட்ட சுயமரியாதை திரு மணத்தை தலைமை ஏற்று நடத்தி உள்ளார் .இவரது குடும்பத்தில் ஒரு சாதி,மத ,நாடு மறுப்பு திருமணமும் ,மூன்று ஜாதி மறுப்பு திருமணமும் நடைபெற்று உள்ளது
எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த இவரின் இன்றைய குடும்பத்தில் 6 க்கும் மேற்ப்பட்ட மருத்துவர்கள் நான்கிற்கும் மேற்ப்பட்ட பொறியாளர்கள் ,ஒரு வழக்கறிஞர் என பல் துறை அறிஞர் பெருமக்கள் உள்ளனர் .இவரது மருமகன்கள் மருத்துவர் பரமானந்தம் இருதய நோய் நிபுணராக தருமபுரியில் புகழ் பெற்று விளங்குகிறார் .மற்றொரு மருமகன் வரதராசன் தமிழ் நாடு குடிநீர் வடிகள் வாரியத்தில் பொறியாளராக பணியாற்றுகிறார் .மற்றொரு மருமகன் ISI யில் இயக்குனராக பணியாற்றி வருகிறார்
இவரது மூத்த மகன் சௌந்திரபாண்டியன் மூன்று FRCS பட்டம் பெற்று இலண்டன் நகரில் புகழ்பெற்ற மருத்துவராக விளங்கினார் .இவரது இளைய மகன் செந்தில் பாண்டியன் லெதர் டெக்னாலஜி முடித்து தர பரிசோதகராக பணியாற்றி வருகிறார்
இத்தகைய பெருமை மிக்க திராவிட இயக்க தீரரை
ஒருவன் உள்ள வரையில் -குருதி
ஒரு சொட்டு உள்ளவரையில்
திராவிட நாட்டின் உரிமைக்குப் போரிடச்
சிறிதும் பின்னிடல் இல்லை திராவிடன்
ஒருவன் உள்ள வரையில் -புரட்சிக் கவிஞர் பேரிகை கொட்டி முழங்கியதை போல் இந்த திராவிட இயக்க வீரரை ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் பாராட்டி மகிழ்கிறது
ஏற்றுசெய்கிறஎந்தபணியும்
மனித சமுதாயத்திற்குத் தினையளவேனும் பயன் விளைவிக்கவேண்டும்
என்றஎண்ணத்துடன் அச்சு ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் கடந்த 20
ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவரும்கோவி.லெனினின் அவர்களின் சொந்தஊர்
திருவாரூர்.
திராவிட இயக்கப் பற்றாளரும் பொதுவுடைமை இயக்கப் புத்தகங்கள்
விற்பனையாளராகச் செயல்பட்டவருமான திருவாரூர் கோவிந்தராசன்-அரசு மருத்துவமனை தலைமைச்செவிலியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ருக்மணி இணையரின் மூத்த மகனாக 10-04-196ல்பிறந்தவர்உடன்பிறந்தவர்கள்இரண்டு சகோதரர்கள்.தஞ்சாவூரில் பிறந்த கோவி.லெனின், அங்கு மழலையர் கல்வியையும்,திருவாரூரில்பள்ளிக்கல்வியையும்பயின்று, பூண்டி புஷ்பம் கல்லூரியில் கணினிப் பாடத்தில் இளம்அறிவியல் (பி.எஸ்ஸி) பட்டம் பெற்றவர்.திருவாரூரில் முதல்வர் கலைஞர் படித்த அதே பள்ளியில்பயின்றவர் 1977ல் பள்ளிப்பருவத்தின்போதேசக நண்பர்களுடன் இணைந்து நற்பணி மன்றத்தைத் தொடங்கி, பொதுப்பணிகளில் ஈடுபட்டவர். 34 ஆண்டுகளைக்கடந்து இன்றும் அந்த நற்பணி மன்றம், பாரதி மக்கள் மன்றம் என்ற பெயருடன் மக்கள் பணியாற்றி வருகிறது. பள்ளி- கல்லூரி நாட்களில் ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்கள், இந்தி ஆதிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், மாணவர்உரிமைகளுக்கான செயல்பாடுகள் ஆகியவற்றில் நேரடியாக ஈடுபட்டவர்.
தந்தை பெரியாரின் சிந்தனைத் தொகுப்புகள், அறிஞர் அண்ணா- கலைஞர் ஆகியோரின் படைப்புகள் ஆகியவற்றை சிறுவயதிலிருந்தே படிக்கத் தொடங்கி, அதன் மூலமாக எழுத்தார்வத்தை வளர்த்துக் கொண்டார். படிக்கும்போதே இவரது படைப்புகள், பத்திரிகைகளில் வெளியாகின.கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தபின், 1990ல் சென்னைக்கு வந்த இவர் தனது தந்தையின் பால்யநண்பரான மூத்த பத்திரிகையாளர் திரு.சின்னகுத்தூசி அவர்களின் வழிகாட்டுதலில் வளரத்தொடங்கினார். இதழியல்துறையில் ஈடுபாடு கொண்டு கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றை மேற்கொண்ட இவர், கடந்த1993ஆம் ஆண்டு முதல் நக்கீரன் வாரமிருமுறை இதழில் பணியாற்றி வருகிறார். தற்போது அந்த இதழின் தலைமைத்துணையாசிரியர் பொறுப்பில் உள்ளார்.
படிக்கின்ற காலத்தில் குறுநாடகங்கள் எழுதி மேடையேற்றி வந்த இவர், பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும்தயாரித்து அளிததுள்ளார். பொதிகை, சன், கலைஞர், ராஜ், மக்கள், தமிழன், வசந்த், உள்ளிட்ட பலதொலைக்காட்சிச் சேனல்களில் இவரது நேர்காணல்களும் கலந்துரையாடல்களும் கவிதை நிகழ்ச்சிகளும்இடம்பெற்றுள்ளன. கவிதைக்காக ஆனந்தவிகடன் பவள விழா, கல்கி வைர விழா ஆகியவற்றில் இவருக்குப்பரிசளிக்கப்பட்டுள்ளது.தலைப்பிரசவம், வேப்பங்காற்று, அழகழகாய்ப் பூத்த பொய்கள் ஆகிய 3 கவிதைத் தொகுப்புகளுடன், எமக்குத் தொழில்அரசியல், கலைஞரிடம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?, திரைத்தமிழ், ரசிகர் மன்றங்களின் நோக்கும் போக்கும்உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகள், சிறுவர் இலக்கியம் என 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பற்றி தமிழில் வெளிவந்துள்ள ஒரே புத்தகத்தின் ஆசிரியரும் கோவி.லெனின்தான். உண்மை,தாகம் போன்ற சமுதாய நோக்குடன் செயல்படும் பத்திரிகைகள், நக்கீரன், கீற்று உள்ளிட்ட இணையதளங்கள்ஆகியவற்றில் இவரது படைப்புகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. கவின் மீடியா என்ற இணையதளத்தின் வாயிலாகப் புதிய எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துத்தந்ததுடன், வாசகர்களையும் படைப்பாளிகளாக்கும் விதத்தில் வாய்ப்பைஉருவாக்கியிருக்கிறார்.இவரது குறுஇதழான '' தமிழ் அணு'' எனும் இதழைப் பாராட்டி திமுக தலைவர் கலைஞர் அவர்கள் இரண்டு முறைமுரசொலியில் கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடதக்கது பேரறிஞர் அண்ணா நூற்றாண்டுவிழாவையொட்டி, அண்ணா-பெருங்கடலிலிருந்து சில துளிகள் என்ற 45 நிமிடநேரஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டார். இதன் குறுந்தகடுகள் தமிழகம் முழுவதும் விற்பனையானதுடன் இந்தஆவணப்படம் பெரியார் ஊடகத்துறையினரால் திரையிடப்பட்டது. அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடந்த தமிழ்ச்சங்க மாநாடு மற்றும் மியான்மரில் நடந்த அண்ணா நூற்றாண்டுவிழா, இலண்டன், பாரீஸ், கொழும்பு ஆகியஇடங்களிலும் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது. தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம், அண்ணாபல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் இப்படம் திரையிடப்பட்டது
திராவிட இயக்க எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சின்னகுத்தூசி அவர்களைப் பற்றிய ஆவணப்படமும் இவரது இயக்கத்தில் வெளிவந்த மற்றொரு படைப்பாகும்.பெரியார் வலைக்காட்சியின் நேர்காணல்கள் பலவற்றைத் தொகுத்து வழங்கி உள்ளார் . திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர்கள்கலி.பூங்குன்றன், அறிவுக்கரசு உள்ளிட்ட பலரையும் வலைக்காட்சிக்காக நேர்காணல் செய்துள்ளார். அண்மையில் சென்னையில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் பெரியார் விருது அளித்து சிறப்பு செய்தார் .அந்த விருதை பெறும்போது அந்த விருது தாயின் மடியில் கிடைத்த முத்தம் என்று இவர் பெருமையுடன் குறிப்பிட்டார் .
கோவி.லெனினின்துணைவியார் திருமதி.பிரதிபா அழகுக் கலைப் பயின்று அது குறித்த புத்தகங்கள் எழுதியிருப்பதுடன்,இணையதளங்களிலும் தனது கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார். மகள் தமிழ்நிலா ஐந்தாம் வகுப்பு பயில்கிறார்

Tuesday, 17 April 2012
Saturday, 14 April 2012
திராவிட இயக்க 100 ஆம் ஆண்டு விழா கருத்தரங்கம்
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் நடத்தும்
திராவிட இயக்க 100 ஆம் ஆண்டு விழா கருத்தரங்கம்
மற்றும்
டாக்டர் .சி.நடேசனார் படத்திறப்பு விழா
அன்புடன் அழைக்கிறோம் ! ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் திராவிடர் இயக்க 100 ஆண்டு விழா கருத்தரங்கமும் திராவிடர் சங்கத்தை நிறுவிய மருத்துவர் நடேசனார் படத்திறப்பு விழாவும் வரும் ஏப்பிரல் திங்கள் 22 ஆம் நாள் ஞாயிற்று கிழமை காலை 10 மணி அளவில் ஊற்றங்கரை அரசு அலுவலர் சங்க கட்டிடத்தில் நடைபெறுகிறதுஇவ் விழாவிற்கு ஆடிட்டர் .ராசேந்திரன் அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார்.விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளாளர் அண்ணா .அப்பாசாமி மாத அறிக்கை வாசிக்கிறார் . திராவிடர் கழக மகளிர் பாசறையின் பொருளர் எ .அகிலா அவர்கள் இக் கருத்தரங்கிற்கு தலைமை தாங்குகிறார் ,விடுதலை வாசகர் வட்ட புரவலரும் மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவருமானஅண்ணா .சரவணன் அவர்கள் விழா அறிமுக உரை ஆற்றுகின்றார் .திருப்பத்தூர் திமுக இளைஞ்சரணி பொறுப்பாளரும் தொழிலதிபருமான அண்ணா .அருணகிரி அவர்களும் ,கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் த.திருப்பதி அவர்களும் ,விடுதலை வாசகர் வட்ட தலைவரும் மாவட்ட திமுக இலக்கிய அணி செயலாளருமான தணிகை .ஜி.கருணாநிதி அவர்களும் முன்னிலை வகிக்கின்றனர்
ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார்.இம் மாதம் நகரின் திராவிட இயக்க மூத்த உறுப்பினர் வ.சுவாமிநாதன் பாராட்ட படுகிறார்.ஊற்றங்கரைத் தமிழ்ச் சங்க செயலாளரும் விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம் பாராட்டுரை.நிகழ்த்துகின்றார்.

கோவி .லெனின் அவர்கள் ''திராவிட இயக்கம் சொன்னதை செய்தது செய்ததை சொன்னதா ?"
என்கிற தலைப்பில் கருத்துரை ஆற்றுகின்றார் .

Subscribe to:
Posts (Atom)