விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Wednesday, 18 April 2012

திராவிடர் இயக்க 100 ஆம் ஆண்டு விழாவில் ஊற்றங்கரை விடுதலை  வாசகர் வட்டத்தால் பாராட்டு பெறும் 
                                             திராவிட இயக்க தீரர் வ.சுவாமிநாதன் 
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 17 ஆம் நிகழ்வான திராவிடர் இயக்க 100 ஆம் ஆண்டு விழாவில் ஊற்றங்கரை விடுதலை  வாசகர் வட்டத்தால் பாராட்டு பெறும் ஊற்றங்கரை நகரின் மூத்த திராவிட இயக்க உறுப்பினர் வ.சுவாமிநாதன் அவர்கள் 1934 ஆம் ஆண்டு திரு.வஜ்ஜிரவேல் முதலியார் திருமதிஇராமாயிஅம்மாள் இணையருக்கு மகனாக பிறந்தார் .அவரின் உடன் பிறந்தவர்கள் 3 சகோதரிகள் 
1945 ஆம் வருடம் வரை தனது தொடக்க கல்வியை ஊற்றங்கரை ஆரம்ப பள்ளியில் படித்து தனது உயர் நிலைக் கல்வியை 1946 -1950 வரை திருப்பத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார் 1952 -1954 வரை இன்டெர் மீடியட் வகுப்பை வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் பயின்றார்
  1952 இல் திருவண்ணாமலையில் சுயேட்ச்சையாக போட்டி இட்ட தனது சித்தப்பா தேவராஜ் முதலியாரை ஆதரித்து தேர்தல் பணியாற்றியதும்,அறிஞர் அண்ணா அவர்களை அழைத்து பிரச்சாரம் செய்ததும் இவரின் முதல் தேர்தல் பணியும் அறிஞர் அண்ணா உடன் ஏற்பட்ட முதல்சந்திப்பும்ஆகும் தனது இன்டெர் மீடியட் கல்வி பயிலும் காலத்தில் முல்லைக் கொம்பையில்  முல்லை .வடிவேலு இல்லத்தில் அடிக்கடி தங்கும்  தந்தை பெரியார் , அறிஞர் அண்ணா ,டாக்டர் கலைஞர்  அவர்களை சந்திக்கும் வாய்ப்பு முல்லை.வடிவேலு அவர்களின் சகோதரரும் ,வகுப்பு தோழருமான குப்புராமன் மூலமாக இவருக்கும் ,இவருடைய வகுப்பு தோழர்கள் பாலகிருட்டிணன்,கே.ஆர் .கிருட்டிணன் ஆகியோருக்கு கிட்டியது .அப்போது 1953 இல் ஆம்பூரில் நடைப்பெற்ற தூக்குமேடை நாடகத்தில் டாக்டர் கலைஞர் அவர்களும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் இணைந்து நடிக்கும் மேடையில் அவர்களுடன் தானும் தனது வகுப்பு தோழர்களும் அமர்ந்திருந்ததை இன்றும் பெருமையாக கருதுகிறார் .
                       1957 ஆம் வருடம் இந்திரா அம்மையாருடன் ஊற்றங்கரையில் பல்துறை அறிஞர்கள் வாழ்த்த மன விழா நடைப்பெற்றது .இவ் வாழ்விணையருக்கு 2 மகன்கள் 3 மகள்கள் பிறந்தனர் 
1958 -1960 வரை ஊற்றங்கரை வருவாய் ஆய்வாளராகவும் 61 ஆம் ஆண்டு ராசிபுரம் வட்டாட்சியர்
அலுவலகத்திலும் பணியாற்றினார் .1962 இல் கிருடினகிரியில் போட்டியிட்ட கமலநாதன் அவர்களின் வெற்றிக்கும் 1967 ,1971 இல் ஊற்றங்கரை சட்ட மன்ற தொகுதியில் போட்டியிட்ட கே.ஆர் கிருட்டிணன் அவர்களின் வெற்றிக்காகவும் கடுமையான உழைப்பை தந்தார் 
               முதன்முதலாக ஊற்றங்கரை பஞ்சயத் போர்டு தேர்தலில் 1982 ஆம் ஆண்டு  போட்டியிட்டு திரு.தண்டாயுதபாணி அவர்களிடம் 150 வாக்கு வித்தியாசத்தில் தோற்றாலும் 1986 ஆம் ஆண்டு 35 
பஞ்சாயத்து உள்ளடங்கிய ஊராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட்டு MGR ஆட்சிக் காலத்தில் காங்கிரெஸ் அதிமுக கூட்டணி இருந்த போதும் 10300 வாக்குகள் அதிகம் பெற்று முதல் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் .1986 முதல் 1991 வரை 14 காங்கிரெஸ் 14 அதிமுக 7 திமுக உறுப்பினர்கள் மட்டுமே இருந்த நிலையில் எவ்வித எதிர்ப்பும் இன்றி 5 எல்லா பஞ்ச்யத்துக்களுக்கும் சிறப்பான அடிப்படை வசதிகளை செய்து இன்றைக்கும் மக்களால் ''சேர்மேன்'' என்று அன்புடன் அழைக்கும் அடைமொழிக்கு சொந்தக்காரர் ஆனார் .இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த காலத்தில் திமுக அறிவித்த போராட்டங்களில் 5 முறை சிறை சென்றார் .இதுவரை கழகம் அறிவித்த போராட்டங்கள் மறியல் என பலவற்றியில் கலந்து கொண்டு தனது பொது வாழ்வில் 9 முறை சிறை சென்றுள்ளார் .
         1984 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊற்றங்கரை துப்பாக்கி சூடு கலவரத்தில் திமுக உறுப்பினர் என்கிற ஒரே காரணத்திற்காக குற்ற பத்திரிக்கையில் இவர் பெயர் இணைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒரு மாத கால நிபந்தனை பிணையில் சேலத்தில் கையெழுத்திட்டார் 
       இவர் உலகின் பல பகுதிக்கட்கு சுற்றுபயணம்  செய்தவர் .இங்கிலாந்து தேசத்தில் இரண்டு மாதம் தங்கியிருக்கும் நேரத்தில் இங்கிலாந்து நாட்டின் மேயர் அவர்களின் அன்பான அழைப்பை ஏற்று அவருடன் தேநீர் விருந்தில் கலந்து கொண்டார் .இலண்டன் நகரின் பிரபலமான ஆங்கில பத்திரிகை இவர் மேயருடன் தேநீர் விருந்தில் கலந்து கொண்ட செய்தியுடன் இவரது பேட்டியும் முதல் பக்கத்தில் வெளியிட்டது .பிரான்ஸ்,இத்தாலி ,ஜெர்மனி ,ரோம் உள்ளிட்ட எட்டுக்கு மேற்பட்ட உலக நாடுகளுக்கு பயணம் செய்து உள்ளார் .
                ஊற்றங்கரை நில வள வங்கியின் தலைவராக 5 ஆண்டுகளும் .போச்சம்பள்ளி மார்க்கெட்டிங்  சொசைட்டி இயக்குனராக 5 ஆண்டுகளும் மத்தூர் நிலவள வங்கியின் இயக்குனராக 5 ஆண்டுகளும் ஊற்றங்கரை திமுக ஒன்றிய பொறுப்பாளராகவும் 5 ஆண்டுகள்  பணியாற்றி உள்ளார் .அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் தலைவராக 20 ஆண்டுகள் ,ஊற்றங்கரை திருமண கூடம் பொறுப்பாளராக 20 ஆண்டுகள் தொடர்ந்து திறம்பட பணியாற்றி வருகிறார் .அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில்  ஒரு கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட கணினி நூலகத்திற்கு நன்கொடையை சேர்த்து தருவதில் வித்யா மந்திர் நிறுவனர் சந்திரசேகருடன் இவர் ஆற்றிய பணி குறிப்பிட தகுந்தது 
                    பத்துக்கும் மேற்ப்பட்ட சுயமரியாதை திரு மணத்தை தலைமை  ஏற்று  நடத்தி உள்ளார் .இவரது குடும்பத்தில் ஒரு சாதி,மத ,நாடு மறுப்பு திருமணமும் ,மூன்று ஜாதி மறுப்பு திருமணமும் நடைபெற்று உள்ளது 
          எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த இவரின் இன்றைய குடும்பத்தில் 6 க்கும் மேற்ப்பட்ட மருத்துவர்கள் நான்கிற்கும் மேற்ப்பட்ட பொறியாளர்கள் ,ஒரு வழக்கறிஞர் என பல் துறை அறிஞர் பெருமக்கள் உள்ளனர் .இவரது மருமகன்கள் மருத்துவர் பரமானந்தம் இருதய நோய் நிபுணராக தருமபுரியில் புகழ் பெற்று விளங்குகிறார் .மற்றொரு மருமகன் வரதராசன் தமிழ் நாடு குடிநீர் வடிகள் வாரியத்தில் பொறியாளராக பணியாற்றுகிறார் .மற்றொரு மருமகன்  ISI யில் இயக்குனராக பணியாற்றி வருகிறார் 
                        இவரது மூத்த மகன் சௌந்திரபாண்டியன் மூன்று FRCS பட்டம் பெற்று இலண்டன் நகரில் புகழ்பெற்ற மருத்துவராக விளங்கினார் .இவரது இளைய மகன் செந்தில் பாண்டியன் லெதர் டெக்னாலஜி முடித்து தர பரிசோதகராக பணியாற்றி வருகிறார் 
                     இத்தகைய பெருமை மிக்க திராவிட இயக்க தீரரை 
ஒருவன் உள்ள வரையில் -குருதி 
ஒரு சொட்டு உள்ளவரையில் 
திராவிட நாட்டின் உரிமைக்குப் போரிடச் 
சிறிதும் பின்னிடல் இல்லை திராவிடன் 
ஒருவன் உள்ள வரையில் -புரட்சிக் கவிஞர் பேரிகை கொட்டி முழங்கியதை போல் இந்த திராவிட இயக்க வீரரை ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் பாராட்டி மகிழ்கிறது

No comments:

Post a Comment