விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Wednesday, 18 April 2012


ஏற்றுசெய்கிறஎந்தபணியும்  மனித சமுதாயத்திற்குத் தினையளவேனும் பயன் விளைவிக்கவேண்டும் என்றஎண்ணத்துடன் அச்சு ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவரும்கோவி.லெனினின் அவர்களின் சொந்தஊர் திருவாரூர்.

திராவிட இயக்கப் பற்றாளரும் பொதுவுடைமை இயக்கப் புத்தகங்கள்
விற்பனையாளராகச் செயல்பட்டவருமான திருவாரூர் கோவிந்தராசன்-அரசு மருத்துவமனை தலைமைச்செவிலியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ருக்மணி இணையரின் மூத்த மகனாக 10-04-196ல்பிறந்தவர்உடன்பிறந்தவர்கள்இரண்டு சகோதரர்கள்.தஞ்சாவூரில் பிறந்த கோவி.லெனின், அங்கு மழலையர் கல்வியையும்,திருவாரூரில்பள்ளிக்கல்வியையும்பயின்று, பூண்டி புஷ்பம் கல்லூரியில் கணினிப் பாடத்தில் இளம்அறிவியல் (பி.எஸ்ஸி) பட்டம் பெற்றவர்.திருவாரூரில் முதல்வர் கலைஞர் படித்த அதே பள்ளியில்பயின்றவர் 1977ல் பள்ளிப்பருவத்தின்போதேசக நண்பர்களுடன் இணைந்து நற்பணி மன்றத்தைத் தொடங்கி, பொதுப்பணிகளில் ஈடுபட்டவர். 34 ஆண்டுகளைக்கடந்து இன்றும் அந்த நற்பணி மன்றம், பாரதி மக்கள் மன்றம் என்ற பெயருடன் மக்கள் பணியாற்றி வருகிறது. பள்ளி- கல்லூரி நாட்களில் ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்கள், இந்தி ஆதிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், மாணவர்உரிமைகளுக்கான செயல்பாடுகள் ஆகியவற்றில் நேரடியாக ஈடுபட்டவர்.

தந்தை பெரியாரின் சிந்தனைத் தொகுப்புகள், அறிஞர் அண்ணா- கலைஞர் ஆகியோரின் படைப்புகள் ஆகியவற்றை சிறுவயதிலிருந்தே படிக்கத் தொடங்கி, அதன் மூலமாக எழுத்தார்வத்தை வளர்த்துக் கொண்டார். படிக்கும்போதே இவரது படைப்புகள், பத்திரிகைகளில் வெளியாகின.கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தபின், 1990ல் சென்னைக்கு வந்த இவர் தனது தந்தையின் பால்யநண்பரான மூத்த பத்திரிகையாளர் திரு.சின்னகுத்தூசி அவர்களின் வழிகாட்டுதலில் வளரத்தொடங்கினார். இதழியல்துறையில் ஈடுபாடு கொண்டு கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றை மேற்கொண்ட இவர், கடந்த1993ஆம் ஆண்டு முதல் நக்கீரன் வாரமிருமுறை இதழில் பணியாற்றி வருகிறார். தற்போது அந்த இதழின் தலைமைத்துணையாசிரியர் பொறுப்பில் உள்ளார்.

படிக்கின்ற காலத்தில் குறுநாடகங்கள் எழுதி மேடையேற்றி வந்த இவர், பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும்தயாரித்து அளிததுள்ளார். பொதிகை, சன், கலைஞர், ராஜ், மக்கள், தமிழன், வசந்த்,  உள்ளிட்ட பலதொலைக்காட்சிச் சேனல்களில் இவரது நேர்காணல்களும் கலந்துரையாடல்களும் கவிதை நிகழ்ச்சிகளும்இடம்பெற்றுள்ளன. கவிதைக்காக ஆனந்தவிகடன் பவள விழா, கல்கி வைர விழா ஆகியவற்றில் இவருக்குப்பரிசளிக்கப்பட்டுள்ளது.தலைப்பிரசவம், வேப்பங்காற்று, அழகழகாய்ப் பூத்த பொய்கள் ஆகிய 3 கவிதைத் தொகுப்புகளுடன், எமக்குத் தொழில்அரசியல், கலைஞரிடம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?, திரைத்தமிழ், ரசிகர் மன்றங்களின் நோக்கும் போக்கும்உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகள், சிறுவர் இலக்கியம் என 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பற்றி தமிழில் வெளிவந்துள்ள ஒரே புத்தகத்தின் ஆசிரியரும் கோவி.லெனின்தான். உண்மை,தாகம் போன்ற சமுதாய நோக்குடன் செயல்படும் பத்திரிகைகள், நக்கீரன், கீற்று உள்ளிட்ட இணையதளங்கள்ஆகியவற்றில் இவரது படைப்புகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. கவின் மீடியா என்ற இணையதளத்தின் வாயிலாகப் புதிய எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துத்தந்ததுடன், வாசகர்களையும் படைப்பாளிகளாக்கும் விதத்தில் வாய்ப்பைஉருவாக்கியிருக்கிறார்.இவரது குறுஇதழான '' தமிழ் அணு'' எனும் இதழைப் பாராட்டி திமுக தலைவர்  கலைஞர் அவர்கள் இரண்டு முறைமுரசொலியில் கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடதக்கது பேரறிஞர் அண்ணா நூற்றாண்டுவிழாவையொட்டி, அண்ணா-பெருங்கடலிலிருந்து சில துளிகள் என்ற 45 நிமிடநேரஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டார். இதன் குறுந்தகடுகள் தமிழகம் முழுவதும் விற்பனையானதுடன் இந்தஆவணப்படம் பெரியார் ஊடகத்துறையினரால் திரையிடப்பட்டது. அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடந்த தமிழ்ச்சங்க மாநாடு மற்றும் மியான்மரில் நடந்த அண்ணா நூற்றாண்டுவிழா, இலண்டன், பாரீஸ், கொழும்பு ஆகியஇடங்களிலும் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது. தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம், அண்ணாபல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் இப்படம் திரையிடப்பட்டது

திராவிட இயக்க எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சின்னகுத்தூசி அவர்களைப் பற்றிய ஆவணப்படமும் இவரது இயக்கத்தில் வெளிவந்த மற்றொரு படைப்பாகும்.பெரியார் வலைக்காட்சியின் நேர்காணல்கள் பலவற்றைத் தொகுத்து வழங்கி உள்ளார் . திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர்கள்கலி.பூங்குன்றன், அறிவுக்கரசு உள்ளிட்ட பலரையும் வலைக்காட்சிக்காக நேர்காணல் செய்துள்ளார். அண்மையில் சென்னையில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற பாராட்டு  விழாவில் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் பெரியார் விருது அளித்து சிறப்பு செய்தார் .அந்த விருதை பெறும்போது அந்த விருது தாயின் மடியில் கிடைத்த முத்தம் என்று இவர் பெருமையுடன் குறிப்பிட்டார் .
கோவி.லெனினின்துணைவியார் திருமதி.பிரதிபா அழகுக் கலைப் பயின்று அது குறித்த புத்தகங்கள் எழுதியிருப்பதுடன்,இணையதளங்களிலும் தனது கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார். மகள் தமிழ்நிலா ஐந்தாம் வகுப்பு பயில்கிறார்

No comments:

Post a Comment