விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Saturday, 14 April 2012

திராவிட இயக்க 100 ஆம் ஆண்டு விழா கருத்தரங்கம்




   ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்  நடத்தும்
  திராவிட இயக்க 100 ஆம் ஆண்டு விழா கருத்தரங்கம் 
   மற்றும்    
  டாக்டர் .சி.நடேசனார் படத்திறப்பு விழா

அன்புடன் அழைக்கிறோம் ! ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் திராவிடர் இயக்க 100 ஆண்டு விழா  கருத்தரங்கமும்  திராவிடர் சங்கத்தை நிறுவிய மருத்துவர் நடேசனார் படத்திறப்பு விழாவும்  வரும் ஏப்பிரல்   திங்கள் 22 ஆம் நாள் ஞாயிற்று கிழமை காலை 10 மணி அளவில் ஊற்றங்கரை அரசு அலுவலர் சங்க கட்டிடத்தில்   நடைபெறுகிறதுஇவ் விழாவிற்கு ஆடிட்டர் .ராசேந்திரன்  அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார்.விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளாளர் அண்ணா .அப்பாசாமி  மாத அறிக்கை வாசிக்கிறார் . திராவிடர் கழக மகளிர் பாசறையின் பொருளர்  எ .அகிலா அவர்கள்   இக் கருத்தரங்கிற்கு தலைமை தாங்குகிறார் ,விடுதலை வாசகர் வட்ட புரவலரும் மாநில பகுத்தறிவாளர் கழகத்  துணைத் தலைவருமானஅண்ணா .சரவணன் அவர்கள்  விழா அறிமுக உரை ஆற்றுகின்றார் .திருப்பத்தூர் திமுக இளைஞ்சரணி பொறுப்பாளரும் தொழிலதிபருமான அண்ணா .அருணகிரி    அவர்களும் ,கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் த.திருப்பதி  அவர்களும் ,விடுதலை வாசகர் வட்ட தலைவரும் மாவட்ட திமுக இலக்கிய அணி செயலாளருமான தணிகை .ஜி.கருணாநிதி அவர்களும் முன்னிலை வகிக்கின்றனர்




ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார்.இம் மாதம் நகரின் திராவிட இயக்க மூத்த உறுப்பினர் வ.சுவாமிநாதன்   பாராட்ட படுகிறார்.ஊற்றங்கரைத் தமிழ்ச் சங்க செயலாளரும் விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம்  பாராட்டுரை.நிகழ்த்துகின்றார்.


            
தருமபுரி மாவட்ட முரசொலி மூத்த பத்திரிக்கையாளர் கே.மணி அவர்கள்  திராவிடர் சங்கத்தை நிறுவிய மருத்துவர் நடேசனார் படத்தினை  திறந்து வைத்து உரையாற்றுகிறார்.நிறைவாக நக்கீரன் இதழின் தலைமை துணை ஆசிரியர்
கோவி .லெனின் அவர்கள் ''திராவிட இயக்கம் சொன்னதை செய்தது செய்ததை சொன்னதா ?"
என்கிற தலைப்பில் கருத்துரை ஆற்றுகின்றார் .




இவ் விழாவினை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ .பிரபு தொகுத்து வழங்குகின்றார்.விடுதலை வாசகர் வட்ட துணைத் தலைவர் மானமிகு இர .வேங்கடம்   நன்றி உரையாற்றுகின்றார்.தமிழர்களே ,இன உணர்வாளர்களே ,திராவிட இயக்க பற்றாளர்களே வருக ! வருக ! என அன்புடன் அழைக்கிறோம் !

No comments:

Post a Comment