ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 82ஆம் மாத நிகழ்வாக வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் பிறந்தநாள் மற்றும் இளைஞர் எழுச்சி நாள் விழா.
ஊற்றங்கரை
வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டமும், ஊற்றங்கரை விடுதலை வாசகர்
வட்டமும் இணைந்து சனிக்கிழமை மேன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல்கலாம்
அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் இளைஞர் எழுச்சி நாள் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு
கல்லூரியின் செயலர் கு. செங்கோடன் தலைமை வகித்தார். ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி
நிறுவனங்களின் நிறுவனர் வே. சந்திரசேகரன், கல்லூரி முதல்வர் முனைவர் க.அருள் முன்னிலை
வகித்தனர் , விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் தணிகை ஜி.
கருணாநிதி,துணைத் தலைவர் மருத்துவர் தேவராசு வாழ்த்துரை
வழங்கினர். விடுதலை வாசகர் வட்டத்தின் துணைச் செயலர் சித. வீரமணி அவர்கள் விழாவின்
அறிமுக உரையாற்றினார். முன்னதாக கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் மற்றும்
நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் க. இராஜா அவர்கள் விழாவில் கலந்துகொண்டு
சிறப்பித்தவர்களை வரவேற்று வரவேற்புரையாற்றினார்.
இளைஞர்
எழுச்சிநாள் விழாவின் முதல் அமர்வில் சிறப்பு விருந்தினர் தமிழ். கா. அமுதரசன்
சிறப்புரையாற்றினார். அப்துல்கலாமின் இளமை வாழ்வு வறுமையும் சவாலும் நிறைந்தது.
அவர் அனைத்தையும் கடந்து தமக்குள் ஒரு இலக்கினை நினைத்து அதனை அடைந்து காட்டியவர்.
பல விண்வெளி ஏவுகணைகளையும் ,
அணுகுண்டு சோதனைகளையும் நிகழ்த்தி உலகளவில் இந்திய நாட்டினை
முதன்மையான நாடாக விளங்கச் செய்தவர். தமிழ்ப்பற்று மிகுந்தவர், சிறந்த கவிஞர் அப்துல் கலாம் என்று கூறினார்.
நிகழ்வின்
இரண்டாவது அமர்வில் சிறப்பு விருந்தினர் ஆளுர் ஷாநவாஸ் அவர்கள் அப்துல்கலாம்
அவர்களின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். பொருளாதாரச்
சுமையோ, சூழலோ,
சமுதாயமோ அல்லது வேறு எதுவும் ஒரு சிறந்த ஆளுமையைத் தடுத்து
நிறுத்தி விட முடியாது. எந்தவொரு சூழலிலும் தம்முடைய ஆற்றலை வெளிப்படுத்துபவர்களாக
மாணவர்கள் விளங்க வேண்டும். அத்தகைய இளைஞர்களை உருவாக்குவதே அப்துல்கலாமின் எண்ணம்
என்று கூறினார்
நிறைவாக
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ச. பார்த்திபன் நன்றி கூறினார். நிகழ்வினை
தமிழ்த்துறை பேராசிரியர் செ.தெய்வம் தொகுத்து வழங்கினார். கல்லூரிக்
கலையரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவில் ஐநூறுக்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட
மாணவர்கள் பங்கேற்றனர்.