விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Thursday, 9 November 2017

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் அய்யா பிறந்த நாள் விழா கொண்டாட்டம் !

திரும்பும் திசை எங்கும் பெரியார் !
திருவிழா கோலம் பூண்டது ஊற்றங்கரை !
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில்  அய்யா பிறந்த நாள் விழா கொண்டாட்டம் !

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 13வது பிறந்த நாள் மிகுந்த உற்சாகத்துடனும் எழுச்சியுடனும் கொண்டாடப்பட்டது .ஊற்றங்கரை நகரில் அமைந்துள்ள  அய்யா சிலை  பெரியார் அவர்களின்  139 அரியபுகைப்படங்கள் தொகுக்கப்பட்ட நீளமான டிஜிட்டல் பதாகையின் பின்னணியில்
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது அய்யா பிறந்த நாள் வாழ்த்து பதாகைகள் கட்டப்பட்டு துணிக்கொடிகள்,காகிதக்கொடிகள் கட்டப்பட்டு பார்ப்போரை கவரும் விதத்தில் அமையப்பட்டிருந்தது 

ஊற்றங்கரையின் நான்கு முனை
சந்திப்பின் மையப்பகுதி முழுவதும் அய்யா உருவப்படங்கள் பல வண்ணப்பதாகைகளாக கட்டப்பட்டிருந்தது .நகரில் எத்திசை நோக்கினும் அய்யா உருவப்படங்களே காட்சி அளித்தன .துணிக்துணிக்கொடிகளாலும் ,காகிதக்கொடிகளாலும் நான்கு முனை சந்திப்பு அலங்கரிக்கப்பட்டிருந்தது
அய்யா அவர்களின் பிறந்த நாளையொட்டி ஊற்றங்கரை ,கல்லாவி ஆகிய நகரங்களில் அமைந்துள்ள அய்யா சிலைகளுக்கும் ,நகரில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் அய்யா உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து வாழ்த்துக்களை பகிர்வது என திட்டமிட்டு 2 நான்கு சக்கர வாகனங்களிலும் 1௦ க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களிலும் கழகக்கொடியுடன் பயணிப்பது என முடிவு செய்யப்பட்டு ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் அண்ணா .அப்பாசாமி அவர்கள் தலைமையில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் சித.வீரமணி ,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செ.சிவராஜ் ,ஊற்றங்கரை நகர தலைவர் இரா.வேங்கடம் ,நகர செயலர் த.சந்திரசேகரன் ,மேனாள் மாவட்ட செயலர் பழ.பிரபு ,மாவட்ட திமுக கலை ,இலக்கிய பகுத்தறிவுப்பேரவையின் அமைப்பாளர் தணிகை .ஜி.கருணாநிதி ,விடுதலை வாசகர் வட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் ஜெயசீலன் ,மேனாள் ஒன்றிய பொறுப்பாளர் பொன்முடி ,மேனாள் நகர செயலர் முனி.வெங்கடேசன்,ஓய்வு பெற்ற அலுவலர் சங்க பொருளர்  வே .முருகேசன் ,க.துரை ,ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் உலகநாதன் ,நகர மகளிரணி அமைப்பாளர் ம.வித்யா இளைஞரணி தோழர்கள் க.திருப்பதி , உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர்

காலை 7 மணியளவில் தந்தை பெரியார் பிறந்த நாளன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் பெரியார் பிஞ்சு இன்னிசை அய்யா சிலையருகே தோழர்கள் அனைவருக்கும் இனிப்புக்களை வழங்கினார் .பெரியார் பிஞ்சு இன்னிசைக்கு வாழ்த்துக்களை தெரிவித்த பின்னர் கழக்கொடி கட்டிய இரு சக்கர வாகனங்கள் ஒன்றான் பின் ஒன்றாக அதை தொடர்ந்து நான்கு சக்கர வாகனங்கள் தொடர  காரப்பட்டு சமத்துவபுரம் நோக்கி குழு புறப்பட்டது

காலை 7.3௦ மணிக்கு காரப்பட்டு சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த அய்யா சிலைக்கு வழக்கறிஞர் ஜெயசீலன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது .சமத்துவபுரத்தில் குடியிருக்கும் பொதுமக்கள் அனைவரையும் வரவேற்று இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்
                           
காலை  8  மணியளவில் கல்லாவி பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த அறிவாசான் தந்தை பெரியார் சிலைக்கு கல்லாவி ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் சுப்பிரமணி  தலைமையில் மேனாள் ஒன்றிய பொறுப்பாளர் பொன்முடி அவர்கள் மாலை அணிவித்தார் ஆரியத்தை மாய்க்க வந்த தந்தை பெரியார் வாழ்க !திராவிடத்தந்தை எங்கள் அய்யா வாழ்க ! என்கிற ஒலி முழக்கங்கள் ஒலிக்க அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது

காலை சிற்றுண்டிக்கு பின்னர் ஊற்றங்கரை நான்கு முனை சந்திப்பில் உள்ள தந்தை பெரியார் சிலையருகே கல்லூரி பேராசிரியர் குமார் தலைமையில் நகரமே அதிரும் வண்ணம் பறை நிகழ்ச்சி நடத்தப்பட்டது ஏராளமான  திராவிடர் கழகம் ,பகுத்தறிவாளர் கழகம் ,ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் ,திராவிட முன்னேற்ற கழகம் ,விடுதலை சிறுத்தைகள் ,அனைத்து வணிகர்கள் சங்கம் ,உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களை சார்ந்தவர்கள் ,பெரியார் பற்றாளர்கள் மாலை அணிவித்து இனிப்புக்களை வழங்கி அய்யா பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்   நான்கு முனை சந்திப்பில் இருந்த மற்றொரு அய்யா சிலைக்கு திமுக நகர செயலர் இர.பாபு சிவக்குமார் தலைமையிலும் மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் வெ.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையிலும் மாலை அணிவிக்கப்பட்டது .திராவிடர் கழகக் கொடியினை ஊற்றங்கரை நகர திராவிடர் கழகத்தலைவர் இரா .வேங்கடம் ஏற்றினார்

   பறை இசை ஒலிக்க ஊர்வலமாய் புறப்பட்டு கல்லாவி சாலையில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின் உருவப்படத்திற்கு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் மாவட்ட பொறுப்பாளர் மகாலிங்கம் அவர்கள் கழகத் தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கு மத்தியில் மாலை அணிவித்தார்
         
ஊற்றங்கரை கல்லாவி சாலையில் உள்ள தமிழ்குயில் விரைவு உணவகத்தில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின்  உருவப்படத்திற்கு பெரியாரணி பயிற்ருனர் முனி.வெங்கடேசன் முன்னிலை வகிக்க  ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட பொருளர் ஆடிட்டர் இராஜேந்திரன் அவர்கள் கழகத் தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கு மத்தியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

ஊற்றங்கரை காய்கறி மார்கெட்டில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின்  உருவப்படத்திற்கு நகர செயலர்  த.சந்திரசேகரன் அவர்கள் தலைமை தாங்க ஒன்றிய திமுக இளைஞரணி பொறுப்பாளர் தீபக் அவர்கள் கழகத் தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கு மத்தியில் மாலை அணிவித்தார்

ஊற்றங்கரை நகர திராவிடர் கழகத்தலைவர் இரா.வேங்கடம் அவர்களின் இல்லமான தமிழ்குடிலில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின்  உருவப்படத்திற்கு எல்.அய்.சி முகவர்  தண்டபாணி முன்னிலை வகிக்க ஆசிரியை சொர்ணம் அவர்கள் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்
                       
 ஊற்றங்கரை வட்டாட்சியர் அலுவலக சாலையில் தணிகை டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் அருகே வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின்  உருவப்படத்திற்கு திமுக மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் அமைப்பாளர் தணிகை ஜி கருணாநிதி அவர்கள் தலைமை தாங்க நல்லாசிரியர் விருது பெற்ற செ.இராஜேந்திரன் அவர்கள் முன்னிலை வகிக்க தணிகை குமாரி அவர்கள் அவர்கள் கழகத் தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கு மத்தியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

கல்லாவி சாலையில் அமைந்துள்ள புயலகத்தில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின் உருவப்படத்திற்கு தமிழ்சங்க தலைவர் கீ.ஆ .கோபாலன் அவர்கள் தலைமை ஏற்று தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கு மத்தியில் மாலை அணிவித்தார் 

தமிழ்நாடு முழுவதும் புகழ்பெற்ற ஊற்றங்கரை நகரின் சிறந்த பள்ளிகளுள் ஒன்றான வித்யா மந்திர்  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின்  உருவப்படத்திற்கு பள்ளியின்  ஆசிரியர்கள் பணியாளர்கள் கலந்து கொள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினரும் வித்யா மந்திர்  கல்வி நிறுவனங்களின்  நிறுவனருமான கல்விவள்ளல் வே.சந்திரசேகரன்  அவர்கள் கழகத் தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கு மத்தியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
சுயமாரியாதை சுடரொளி அ.பழனியப்பன் அவர்களின் இன எழுச்சி இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின்  உருவப்படத்திற்கு திமுக மாவட்ட சிறுபான்மை பிரிவின் அமைப்பாளர் பா.அமானுல்லா  தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கு மத்தியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

ஊற்றங்கரை பெரியார் நகர் குடியிருப்போர் சார்பில் தந்தை பெரியார் அவர்களின்  உருவப்படத்திற்கு பொதுப்பணித்துறையில் ஓய்வு பெற்ற வே.முருகேசன் அவர்கள் தலைமை தாங்க பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் சித.வீரமணி முன்னிலை வகிக்க  திமுக மாவட்ட மருத்துவரணி துணை   அமைப்பாளர்  மருத்துவர் மாலதி நாராயணசாமி அவர்கள் மாலை அணிவித்தார்

அப்பிநாயக்கன்பட்டியில் தந்தை பெரியார் அவர்களின் 139 வது பிறந்த நாளையொட்டி பெரியார் படம் வைக்கப்பட்டு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.வழக்கறிஞர் ஜெயசீலன் கழகக்கொடியை ஏற்றி அய்யாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார்   
நிறைவாக ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்துடன் இணைந்து
அம்பேத்கார் பெரியார் கலை இலக்கிய மன்றம் மற்றும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் இணைந்து  தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மிட்டப்பள்ளியில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது

மிட்டப்பள்ளி பேரறிஞர் அண்ணா சிலையிலிருந்து பறை இசை முழங்க ஏரளாமான இளைஞர்கள் தந்தை பெரியார் வாழ்க என்று ஒலிமுழக்கமிட்டு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் படங்களுக்கு மாலை அணிவித்து ஊர்வலம் அரசு தொடக்கப்பள்ளியில் நிறைவடைந்தது அதைதொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் 
ஏலகிரி தென்போஸ்கோ கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் .குமார் தலைமை தாங்கினார் ,ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் துணை செயலர் சித.வீரமணி ,ஆசிரியர் சுகந்தர் ,சுந்திரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆசிரியர் ராஜீவ் காந்தி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்
 ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் செயலர் பழ.பிரபு அனைவருக்கும் தந்தை பெரியார் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி தொடக்க உரையை நிகழ்த்தினர் .விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் தணிகை ஜி கருணாநிதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் .திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் பொன்.செல்வக்குமார் அவர்கள் பெரியாரும் சமூக மாற்றமும் என்கிற தலைப்பில் தந்தை பெரியார் அவர்களின் பண்பு நலன்களை விவரித்து அவரால் ஏற்படுத்தப்பட்ட சமூக மாற்றங்களை பட்டியலிட்டு மிக அருமையான உரை நிகழ்த்தினார்  .வருகை தந்த அனைவருக்கும் பெரியார் சுயமரியாதை பிரச்சார நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன நிறைவாக திருமால் நன்றி கூறினார் .இனி வரும்  காலங்களில் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்துடன் இணைந்து அம்பேத்கார் பெரியார் கலை இலக்கிய மன்றம் செயல்படும் என்று உறுதி அளித்தனர் 
































































No comments:

Post a Comment