விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Thursday, 9 November 2017

79ஆம் மாத நிகழ்வாக பச்சை தமிழர் காமாராசர் அவர்களின் 115 வது பிறந்த நாள் விழா



ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 79ஆம் மாத நிகழ்வாக பச்சை தமிழர் காமாராசர் அவர்களின் 115 வது பிறந்த நாள் விழா தமிழக அரசின் பல்வேறுவிருதுகளையும் ,பாராட்டுக்களையும் ISO தர சான்றிதல் பெற்ற கஞ்சனூர் அரசினர் நடுநிலைப்பள்ளியில் வெகு சிறப்புடன் கொண்டாடப்பட்டது
காமராஜர் அவர்களின் கல்விக் கனவை நிறைவேற்றும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வரும் கஞ்சனூர் அரசு நடுநிலைப்பள்ளியானது மாவட்ட அளவில் சிறந்த பள்ளி, யுனிசெப் தங்கப்பதக்கம், முன்னு தாரணப் பள்ளி, பசுமைப் பள்ளி உட்பட 6 விருதுகளை இப்பள்ளி பெற்றுள்ளது. 2014-15ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ், கல்வித் தரத்தில் கிரேடு, மாநில அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பசுமைப் பள்ளிக்கான முதல் பரிசு, 2015-16ல் காமராஜர் விருது என பல்வேறு விருதுகளை பெற்றதுடன் 2016-17ல் குழந்தை நேயப் பள்ளியாக தேர்ந்துடுக்கபட்ட பெருமை கொண்டது
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிவறைகள், சோலார் சிஸ்டம் மூலம் மின்வசதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மூலிகை தோட்டம் போன்ற வசதிகளுடன். ஒவ்வொரு மரக்கன்றுக்கும் ஒவ்வொரு மாணவரது பெயரைச் சூட்டி, அவரவர் தங்கள் மரக்கன்றுகளைப் பராமரித்து வளர்க்க, ஊக்கமளித்து அரசு பள்ளிகளுக்கெல்லாம் முன்னுதாரணமான பள்ளியாக செயல்பட்டு வரும் இப் பள்ளியில் கல்வி வள்ளல் பிறந்த நாளை கொண்டாட விடுதலை வாசகர் வட்டம் முடிவு செய்தது
இப் பள்ளியின் வளர்ச்சிக்கு பெரிதும் காரணமான தலைமை ஆசிரியர் சித .வீரமணி அவர்கள் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவராகவும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் துணை செயலராகவும் செயல்படுகிறார்.நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த விடுதலை வாசகர் வட்ட பொறுப்பாளர்களை பறை இசை ஒலித்து வரவேற்றனர் .நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் அறிமுகப்படுத்தி தலைமை ஆசிரியர் சித.வீரமணி வரவேற்புரையாற்றினார் .
விடுதலை வாசகர் வட்ட செயலர் பழ.பிரபு ,வாசகர் வட்ட துணைத்தலைவர்கள் இர.பழனி ,இரா,வேங்கடம் ,வாசகர் வட்டத்தின் மேனாள் பொருளாளர் அண்ணா .அப்பாசாமி ,,தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மேனாள் பொறுப்பாளர் எஸ்.ஏ.காந்தன் ,பணி நிறைவு பெற்ற உதவி தலைமை ஆசிரியர் கரண் சந்த் மோகன் சிங், வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர் செ.சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து பள்ளியின் செயல்பாடுகளை பாராட்டியும் ,காமராஜர் தமிழர்களுக்கு ஆற்றிய தொண்டுகள் குறித்து விரிவாக விளக்கி உரையாற்றினர் கஞ்சனூர் ஊராட்சி மன்ற தலைவர் மாது நிகழ்விற்கு தலைமை தாங்கினார்
பழைய மாணவர்கள் சார்பில் கேசவன்  அவர்களும் பள்ளி மேலாண்மை குழு சார்பில் ஜானகி முருகன் ஆகியோரும் கலந்து கொண்டனர் .ஓவிய போட்டி,பேச்சுபோட்டியில் வென்ற மாணவர்களுக்கும் ,காமராஜர் குறித்து பாடல்களை பாடிய மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சீரிய பகுத்தறிவாளரும் ,வழக்கறிஞருமான ஜெயசீலன் கலந்து கொண்டு மாணவர்கள் ரசிக்கும் வகையில் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்
நிறைவாக ஆசிரியர் சந்தோஷ் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி நிறைவு பெற்றது ,மதிய உணவு இடைவெளிக்கு பின்னர் மாணவர்களுக்கு காமராஜர் திரைப்படம் திரையிட்டு காட்டப்பட்டது .நிகழ்வில் பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாக பணியாற்றும் ஆசிரியர்கள் கலையரசி,கௌரி ,கார்த்திக் ,லட்சுமி ஆகியோருக்கு விடுதலை வாசகர் வட்டம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது

No comments:

Post a Comment