விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Wednesday, 8 November 2017

78 ஆம் மாத நிகழ்வாக ஊற்றங்கரை அனைத்து வணிகர்கள் சங்கமும் அய்.சி.அய்.சி அய் வங்கியும் இணைந்து மாபெரும் முதலீட்டாளர்கள் கருத்தரங்கம்


ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 78 ஆம் மாத நிகழ்வாக ஊற்றங்கரை அனைத்து வணிகர்கள் சங்கமும் அய்.சி.அய்.சி அய்  வங்கியும் இணைந்து மாபெரும் முதலீட்டாளர்கள் கருத்தரங்கம் ஊற்றங்கரை மகேந்திரா வணிக வளாக கூடத்தில் மாலை 5 மணியளவில் மிக சிறப்பாக நடந்தேறியது அய்.சிஅய்சிஅய் வங்கியின் மேலாளர் ஜெ.பாலாஜி அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்வு தொடங்க பெற்றது

                                    நிகழ்விற்கு தணிக்கையாளரும்,ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளாளருமான ந.இராசேந்திரன் விழா அறிமுக உரையாற்ற தணிக்கையாளர்கள் ஆர்.மகபூப்கான் ,அரூர் ஜி சத்தியமூர்த்தி ஆகியோர் விழாவினை தொடங்கி வைத்தனர் .ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவரும் ஊற்றங்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவருமான தணிகை ஜி கருணாநிதி தலைமை தாங்கி உரையாற்றினார்
                                                     ஊற்றங்கரை அனைத்து வணிகர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.செங்கோடன் , ஊற்றங்கரை அனைத்து வணிகர்கள் சங்கத்தின் செயலர் இர.உமாபதி ,சிங்காரப்பேட்டை அனைத்து வணிகர்கள் சங்கத்தின் தலைவர் வி.கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர் அய்.சிஅய்சிஅய் வங்கியின் மண்டல அதிகாரி பி.ஆர் .அசோக்குமார் ,அரூர் மண்டல வணிக வரி அலுவலர் எஸ்.இரவிக்குமார் கிருஷ்ணகிரி மண்டல வணிக வரி அலுவலர் எஸ்.சத்திய நாராயணன் ஆகியோர் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்

அய்.சிஅய்சிஅய் வங்கியின் மண்டல துணை மேலாளர் அசோக் முதலீட்டளர்கள் கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றினார் .சரக்கு மற்றும் சேவை வரி குறித்த காணொளி நிகழ்வினை தொடங்கி வைத்து தணிக்கையாளர்கள் கிருட்டிணகிரி எ ஸ்..ஏ.கே .ஆசாத்  , தருமபுரி ஜெகன்   சேலம்  கே .பாலசுப்ரமணியம்  ஓசூர்  எம்.முருகேசன் ஆகியோர் உரையாற்றினர்
                         கூட்ட அரங்கம் நிறைந்து வழிய ஏராளாமான வணிகர்களின் கேள்விகளுக்கு தணிக்கையாளர்கள்     கிருட்டிணகிரி   எச் லியாகத் அலி , தருமபுரி  சேகர்சேலம் கே.கே .ரவி (எ) வீரப்பன்  ,கிருட்டிணகிரி எம் .சபீர் உசேன்   ,ஓசூர்      பி .பாலசுந்தரம் ஓசூர்   எஸ். திலகவதி  ஆகியோர் பதில் அளித்து  உரையாற்றினார்
                           

நிகழ்வினை ஊற்றங்கரை விடுதலை வாசகர்  வட்ட  செயலர் பழ.பிரபு ஒருங்கிணைக்க  விடுதலை வாசகர் வட்ட துணை செயலர் சித.வீரமணி நன்றி உரையாற்றினார் ,நிகழ்வில் பங்கேற்ற அணைத்து வணிகர்களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரி விளக்க கையேடும் ,குறிபேடும் ,எழுதுகோலும் அளிக்கப்பட்டது .நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு பல்வேறு வணிகர் சங்கங்களின் பொறுப்பாளர்கள் சிறப்பு செய்தனர் .பங்கேற்ற அனைவருக்கும் தேநீர் ,இரவு விருந்து அளிக்கப்பட்டது.இது போன்ற வணிகர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வினை விடுதலை வாசகர் வட்டம் தொடர்ந்து நடத்திட வேண்டுமென அனைத்து வணிகர்கள்  சங்கம் சார்பில்வேண்டுகோள் விடுக்கப்பட்டது








































































No comments:

Post a Comment