விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Sunday, 10 January 2016

அய்ந்தாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர் கழகத் தலைவரும் ,விடுதலை நாளேட்டின் ஆசிரியருமான தமிழர் தலைவர் கி வீரமணி அவர்களின் 83 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் அய்ந்தாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர் கழகத் தலைவரும் ,விடுதலை நாளேட்டின் ஆசிரியருமான தமிழர் தலைவர் கி வீரமணி அவர்களின் 83 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கருத்தரங்கம்  ஊற்றங்கரை திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது .
நிகழ்ச்சியின் தொடக்கமாக வாசகர்  வட்ட பொருளாளர் ஆடிட்டர் .இராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார் .திமுக மாவட்ட மருத்துவ அணி செயலாளரும் ,விடுதலை வாசகர் வட்ட துணைத்தலைவருமான மருத்துவர்.வெ.தேவராசு  விழா அறிமுக உரையாற்றினார் . மத்தூர் கலைமகள் கலாலயா கல்வி நிறுவனத்தின் நிறுவனர் சிந்தை.மு இராசேந்திரன் முன்னிலை வகித்து உரையாற்றினர்
சென்னை கடலூர் வெள்ள நிவாரண பணிகளில் மிகச் சிறப்பாக ஈடுபட்டு வரும் பெரியார் மருத்துவ குழுமத்திற்கு ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் திரட்டிய 20,000 மதிப்புள்ள மருந்து பொருட்களை வாசகர் வட்ட தலைவர் தணிகை ஜி கருணாநிதி ,அமைப்பாளர் பழ.வெங்கடாசலம் ,பழ.பிரபு ஆகியோர் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வி.ஜி .இளங்கோ அவர்கள் மூலம் வழங்கினர்.
வருகை தந்திருந்த விருந்தினர்களுக்கு திராவிடர் கழக ஒன்றிய பொறுப்பாளர் பொன்முடி ,வித்யா மந்திர் தமிழ் துறை தலைவர் தெய்வம் ,திமுக ஒன்றிய செயலாளர் வ.சாமிநாதன் ,திமுக நகர செயலர் இர.பாபு சிவக்குமார் ஆகியோர் நூல்களை வழங்கி சிறப்பு செய்தனர்.உவமைக்கவிஞர் சுரதா அவர்களின் படத்தினை திறந்து வைத்து அவருடன் பழகிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் கவிஞர் சாகுல் அமீத் .
 நிறைவாக திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான நெல்லை ஜெயந்தா ''திராவிடம் வளர்க்கு தமிழ்''என்னும் தலைப்பில் மிக சிறப்பான உரையை நிகழ்த்தினார் . விழாவை வாசகர் வட்ட செயலாளர் பழ .பிரபு ஒருங்கிணைக்க ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் அண்ணா .அப்பாசாமி அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.
பங்கேற்ற அனைவருக்கும் நீதிக்கட்சியின் சாதனை  குறிப்புக்களும் ,தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறித்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதிய கவிதை நகல் அனைவருக்கும்  தரப்பட்டன . இது போன்ற நிகழ்வுகள் வாசகர் வட்டத்தின் சார்பில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என வருகை தந்திருந்த அனைவரும் வலியுறுத்தினர்​

அய்ந்தாம் ஆண்டு நிறைவு விழா

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் கொண்டாடிய குழந்தைகள் தின விழா! 59 ஆம் நிகழ்வு

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் கொண்டாடிய குழந்தைகள் தின விழா !
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 59 ஆம் நிகழ்வு குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு நவம்பர் 14 காலை 10 மணியளவில் ஊற்றங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் உள்அரங்கில் நடைபெற்றது 

இந் நிகழ்ச்சிக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் அவர்கள் தலைமை தாங்கினார் .கிருட்டிணகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவரும் கஞ்சனூர் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியருமான சித.வீரமணி, ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு ,ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் அண்ணா.அப்பாசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
புதுவை பல்கலைக்கழக பேராசிரியரும் ,குழந்தை நாடகக்கலைஞருமான வேலு.சரவணன் அவர்கள் நிகழ்வில் பங்கேற்று ‘’கடல் பூதம்’’ நாடகத்தினை நடத்தி பார்வையாளர்கள் அனைவரையும் நாடகத்தில் பங்கேற்க செய்தார் .குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சி பொங்க உற்சாகத்துடன் கண்டு களித்தனர் . நிகழ்ச்சியில் ஒன்றிய மகளிரணி தலைவர் வித்யா ,பெரியார் பிஞ்சு இன்னிசை ,அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பொறுப்பாளர் சீனி.இராஜா ஏராளாமான ஆசிரியர் பெருமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் .குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தங்கள் பள்ளியில் நிகழ்வினை நடத்தியமைக்கு ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்திற்கு பள்ளியின் நிர்வாகிகள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்

குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பிறந்த நாள்

​ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 58 ஆம் மாத நிகழ்வாக வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழாய்வுத்துறை மற்றும் நாட்டுநலப் பணி திட்டத்துடன்  இணைந்து ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் மேனாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பிறந்த நாளை  இளைஞர் எழுச்சி நாள்  தேசியகருத்தரங்கமாக ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கலையரங்கத்தில் காலை 9.3௦0 மணியளவில் நடைபெற்றது 

  இந் நிகழ்ச்சிக்கு தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர்  முனைவர்.க.இராஜா வரவேற்புரையாற்றினார் .ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் செயலர் பழ.பிரபு விழாஅறிமுகவுரையாற்றினார் வித்யாமந்திர் கல்வி குழுமங்களின் நிறுவனர்வே.சந்திரசேகரன் அவர்கள் அப்துல் கலாம் படத்தினை திறந்து வைத்து  தலைமையுரையாற்றினார் வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலர் .கு.செங்கோடன் அவர்களும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் அமைப்பாளரும் திராவிடர் கழக மண்டலத் தலைவருமான பழ.வெங்கடாசலம் அவர்களும் முன்னிலை வகித்து உரையாற்றினர் 

காலை 10 மணியளவில் முதல் அமர்வு தொடங்கியது ஈரோடு மனிதவள மேம்பாட்டு  பயிற்றுனர் என்.ஜாகிர் உசேன் அவர்கள் ''தலைவா....வா....'' என்கிற தலைப்பில் தன்னம்பிக்கை உரையாற்றினார் 
.               இரண்டாம் அமர்வு:காலை11.30 மணியளவில் தொடங்கியது சென்னை இலக்கிய கழகத்தின் நிறுவனரும் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத்தலைவருமான  எமரால்ட் கோ .ஒளிவண்ணன் அவர்கள் எழுதிய ‘’மேடையில் பேசலாம் வாங்க'' நூல் வெளியீட்டு விழா  நடைபெற்றது .திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அகிலாஎழிலரசன் அவர்கள் நூலினை வெளியிட வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்.க.அருள் அவர்கள் நூலினை பெற்றுக்கொண்டார்கள் .அவரை தொடர்ந்து வாசகர் வட்ட தோழர்கள்  திராவிடர் கழக தோழர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள்  வரிசையில் நின்று நூல்களை பெற்று கொண்டனர் .''சிறகுகளை விரிப்போம்'' என்கிற தலைப்பில் கோ.ஒளிவண்ணன் அவர்கள் சிறப்பான தன்னம்பிக்கை எழுச்சியுரையாற்றினார் 

  மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மூன்றாம் அமர்வு பிற்பகல் 2 மணியளவில் தொடங்கியது கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற  பேச்சுப்போட்டி மற்றும் கவிதைப்போட்டி''அப்துல் கலாம் காண விரும்பிய இந்தியா ''என்கிற தலைப்பில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில்  மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்  அண்ணா.சரவணன் தலைமை தாங்கி பேச்சுப் போட்டி கவிதை போட்டியில் பங்கேற்ற மாணவர்களை வாழ்த்தி தலைமயுரையாற்றினர் 
நிறைவாக கல்லூரியின் தமிழாய்வுத்துறை தலைவர் முனைவர்.இரா.தெய்வம் கருத்துரையாற்றினார் .  இந் நிகழ்ச்சிக்கு கல்லூரியின்  தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர்  முனைவர்.க.இராஜா மிக சிறப்பாக ஒருங்கிணைக்க  கல்லூரியின் நாட்டுநலப்பணிதிட்ட அலுவலர் .ச.பார்த்திபன் நன்றி நவில நிகழ்ச்சி நிறைவுப்பெற்றதுந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழாய்வுத்துறை மற்றும் நாட்டுநலப் பணி திட்டத்துடன்  இணைந்து ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் மேனாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பிறந்த நாளை  இளைஞர் எழுச்சி நாள்  தேசியகருத்தரங்கமாக ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கலையரங்கத்தில் காலை 9.3௦0 மணியளவில் நடைபெற்றது 

  இந் நிகழ்ச்சிக்கு தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர்  முனைவர்.க.இராஜா வரவேற்புரையாற்றினார் .ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் செயலர் பழ.பிரபு விழாஅறிமுகவுரையாற்றினார் வித்யாமந்திர் கல்வி குழுமங்களின் நிறுவனர்வே.சந்திரசேகரன் அவர்கள் அப்துல் கலாம் படத்தினை திறந்து வைத்து  தலைமையுரையாற்றினார் வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலர் .கு.செங்கோடன் அவர்களும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் அமைப்பாளரும் திராவிடர் கழக மண்டலத் தலைவருமான பழ.வெங்கடாசலம் அவர்களும் முன்னிலை வகித்து உரையாற்றினர் 

காலை 10 மணியளவில் முதல் அமர்வு தொடங்கியது ஈரோடு மனிதவள மேம்பாட்டு  பயிற்றுனர் என்.ஜாகிர் உசேன் அவர்கள் ''தலைவா....வா....'' என்கிற தலைப்பில் தன்னம்பிக்கை உரையாற்றினார் 
.               இரண்டாம் அமர்வு:காலை11.30 மணியளவில் தொடங்கியது சென்னை இலக்கிய கழகத்தின் நிறுவனரும் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத்தலைவருமான  எமரால்ட் கோ .ஒளிவண்ணன் அவர்கள் எழுதிய ‘’மேடையில் பேசலாம் வாங்க'' நூல் வெளியீட்டு விழா  நடைபெற்றது .திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அகிலாஎழிலரசன் அவர்கள் நூலினை வெளியிட வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்.க.அருள் அவர்கள் நூலினை பெற்றுக்கொண்டார்கள் .அவரை தொடர்ந்து வாசகர் வட்ட தோழர்கள்  திராவிடர் கழக தோழர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள்  வரிசையில் நின்று நூல்களை பெற்று கொண்டனர் .''சிறகுகளை விரிப்போம்'' என்கிற தலைப்பில் கோ.ஒளிவண்ணன் அவர்கள் சிறப்பான தன்னம்பிக்கை எழுச்சியுரையாற்றினார் 

  மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மூன்றாம் அமர்வு பிற்பகல் 2 மணியளவில் தொடங்கியது கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற  பேச்சுப்போட்டி மற்றும் கவிதைப்போட்டி''அப்துல் கலாம் காண விரும்பிய இந்தியா ''என்கிற தலைப்பில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில்  மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்  அண்ணா.சரவணன் தலைமை தாங்கி பேச்சுப் போட்டி கவிதை போட்டியில் பங்கேற்ற மாணவர்களை வாழ்த்தி தலைமயுரையாற்றினர் 
நிறைவாக கல்லூரியின் தமிழாய்வுத்துறை தலைவர் முனைவர்.இரா.தெய்வம் கருத்துரையாற்றினார் .  இந் நிகழ்ச்சிக்கு கல்லூரியின்  தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர்  முனைவர்.க.இராஜா மிக சிறப்பாக ஒருங்கிணைக்க  கல்லூரியின் நாட்டுநலப்பணிதிட்ட அலுவலர் .ச.பார்த்திபன் நன்றி நவில நிகழ்ச்சி நிறைவுப்பெற்றது